அட போப்பா.. நீ என்ன சொல்றது.. நான் என்ன கேட்பது.. "ஓனர்" பேச்சை கேட்க மறுக்கும் அர்ஜென்டினா பிளேபாய்
பியூனஸ் அயர்ஸ்: பிளேபாய் இதழ்களில் இனிமேல் முழுமையான நிர்வாணப் படங்கள் இடம்பெறாது என்று பிளேபாய் நிறுவனர் ஹெப்னர் அறிவித்துள்ள நிலையில் அதெல்லாம் கிடையாது, எங்களது இதழ்களில் தொடர்ந்து நிர்வாணப் படங்கள் இடம் பெறும் என்று பிளேபாய் இதழின் அர்ஜென்டினா பதிப்பு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் யாரைக்க கேட்டு இந்த முடிவுக்கு நிறுவனர் ஹியூக் ஹெப்னர் வந்தார், இது ஒரு தலைபட்சமான முடிவு என்றும் அர்ஜென்டினா பதிப்பு நிர்வாகிகள் கோபம் காட்டியுள்ளனர்.

ஹெப்னர் சொல்படி நடக்க முடியாது என்றும் அர்ஜென்டினா பதிப்பு தொடர்ந்து நிர்வாணப் படங்களை வெளியிடும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். வாசகர்கள் கலங்க வேண்டாம் என்றும் அவர்கள் ஆறுதலாகப் பேசியுள்ளனர்.
இதுகுறித்து அர்ஜென்டினா பதிப்பு நிர்வாகிகள் விடுத்துள்ள அறிக்கையில், இன்டர்வியூ போல, பிளாக்குகள் போல, செய்திகள் போலத்தான் இந்தப் புகைப்படங்களும். நிர்வாணப் பெண்களின் படத்தை எடுப்பதால் என்ன லாபம் வந்து விடப் போகிறது. இது தொடரும். அதை நீக்கும் எண்ணம் இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பிளேபாய் இதழுக்கு முன்பு போல மவுசு இல்லை. காரணம் இன்டர்நெட்டில் பிளேபாயை விட ஏகப்பட்ட கவர்ச்சியும், ஆபாசமும் கொட்டிக் கிடக்கின்றன. இதனால்தான் அந்த இதழின் ஒட்டுமொத்த சர்க்குலேஷன் வெறும் 8 லட்சமாக குறைந்து போய் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக நிர்வாணப் படங்களை நீக்குவது என்ற முடிவை நிறுவனர் ஹெப்னரும், தலைமை செயலதிகாரியும் இணைந்து எடுத்துள்ளனர். ஆனால் அர்ஜென்டினாவில் புரட்சி வெடித்துள்ளது!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications