Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு கதவை சாத்தினாலும்.. மறு கதவு வழியாக மலர்ச்சியைக் காணும் பிளேபாய்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிளேபாய் பத்திரிகை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், முழு நி்ர்வாணப் படங்களை இனி பிரிண்ட் எடிஷனில் போடுவதில்லை என்ற "வரலாற்றுச் சிறப்பு" வாய்ந்த முடிவை எடுத்தது. பிரிண்ட் எடிஷனின் சர்க்குலேஷன் சரியில்லை என்ற போதிலும், அதன் ஆன்லைன் பத்திரிகைக்கு திடீர் மவுசு கூடியுள்ளது.

பிளேபாய் பிரிண்ட் பதிப்பின் நிர்வாணப் படங்கள் இல்லாத முதல் இதழ் அடுத்த வாரம் விற்பனைக்கு வருகிறது. புதுப் பொலிவுடன் இந்த இதழ் வாசகர்களின் கையில் தவழவுள்ளது.

இந்த நிலையில் பிளேபாய் இதழின் ஆன்லைன் பதிப்பு புதுப் பொலிவு கண்டுள்ளது. இதற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் பேஜ்வியூஸ் செமையாக ஏறியுள்ளதாம்.

செம டிராபிக்

செம டிராபிக்

இதுகுறித்து தலைமை செய்தி அதிகாரி கோரி ஜோன்ஸ் கூறுகையில், இணையதளத்தின் டிசைன் மாற்றப்பட்ட பின்னர் தற்போது டிராபிக் அதிகமாகியுள்ளது. பேஜ்வியூஸ் கூடியுள்ளது.

40 லட்சம் டூ 2 கோடி

40 லட்சம் டூ 2 கோடி

இதுவரை இணையதளத்தின் யூனிக் விசிட்டர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக இருந்து வந்தது. இது தற்போது 2 கோடியாக உயர்ந்துள்ளது.

இளைஞர்கள் வரவு அதிகரிப்பு

இளைஞர்கள் வரவு அதிகரிப்பு

மேலும் இதுவரை எங்களது இணயதளத்தைப் பார்ப்போரின் சராசரி வயது 47 ஆக இருந்தது. இது தற்போது 30 ஆக மாறியுள்ளது. இதன் மூலம் அதிக அளவிலான இளைஞர்களதை பிளேபாய் இணையதளம் கவர்ந்திழுத்துள்ளதை உணரலாம்.

62 வயதானாலும்

62 வயதானாலும்

பிளேபாய் இதழுக்கு 62 வயதானாலும் கூட இளைய சமுதாயத்தினரை கவர்ந்திழுக்கக் கூடிய வசீகரம் இன்னும் குறையவில்லை என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம் என்றார் அவர்.

செல்பி புகைப்படத்துடன் அட்டைப் படம்

செல்பி புகைப்படத்துடன் அட்டைப் படம்

நிர்வாணப் படம் இல்லாத முதல் இதழும் கூட பல புதுமைகளைக் கொண்டுள்ளது. அதன் அட்டைப் படத்தில் மாடல் அழகி செல்பி எடுப்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது.

தடுமாற்றத்தில் பிரிண்ட்

தடுமாற்றத்தில் பிரிண்ட்

பிளேபாய் பத்திரிகையின் இணையதளம் வேகமாக வளர்ந்து வந்தாலும் கூட பிரிண்ட் பதிப்பு தொடர்ந்து கஷ்டத்தில்தான் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் அதன் சர்க்குலேஷன் உலக அளவில் 8 லட்சமாக இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+