தம்பி.. கூட 40 டாலர் வச்சிருக்கேன்.. என்ஜாய்.. அமெரிக்க இளைஞருக்கு ஸ்வீட் ஷாக்!
Recommended Video

லாஸ் வேகாஸ் : அமெரிக்காவில் விமானத்தில் பணப்பையை இழந்தவருக்கு, கூடுதல் பணத்துடன் பணப்பை வீட்டிற்கே வந்த சம்பவம் நடந்துள்ளது.
20 வயதான ஹன்டர் ஸ்மாட் என்ற இளைஞர், தனது தங்கையின் திருமணத்திற்காக ஒமாஹாவிலிருந்து லாஸ் வேகாஸ்க்கு விமானத்தில் பறந்து சென்றார். விமான நிலையம் வந்து, அடையாள அட்டையை தேடிய போது பணப்பை காணவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து விட்டு, ஒரு மணி விசாரணைக்குப் பின்னர் தனது பெற்றோருடன் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் ஹன்டரின் வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது. அதை பிரித்து பார்த்த போது ஹன்டருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. ஆமாம், அவர் இழந்த பணப்பை அதில் இருந்தது. அதை விட அவர் வைத்திருந்த பணத்துடன் சேர்த்து கூடுதலாக பணம் இருந்தது. அதில் ஒரு கடிதமும் இருந்தது. அதில், விமானத்தில் 12 வது வரிசை இருக்கையின் ஜன்னல் ஓரம் இந்த பணப்பை கிடந்தது. இது மீண்டும் திரும்ப கிடைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருப்பீர்கள். நீங்கள் வைத்திருந்த பணத்தோடு கூடுதலாக 40 டாலர்கள் சேர்த்து, 100 டாலர் பணம் வைத்துள்ளேன். மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். "எல்லாம் நன்மைகே" என்று குறிப்பிடபட்டிருந்தது.
இந்த தகவலை ஹண்டரின் தாயான ஜீனியா தனது முகநூலில் பகிர்ந்து இருந்தார். அதில், ஐந்து குழந்தைகளுக்கு அப்பாவான ஒமாஹாவைச் சேர்ந்த டாட் பிரவுன் என்பவர், இழந்த பணப்பையை மீண்டும் தங்களிடம் சேர்த்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார். அது வைரலாக பரவியது. மேலும் அந்த பதிவை 3,500 க்கும் மேற்பட்டோர் பகிர்ந்து இருந்தனர். 6 ஆயிரத்திற்கும் மேலான லைக்குகளை அள்ளியது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications