துபாய் மருத்துவமனையில் கோமாவில் ஏழை தமிழர்: காப்பற்ற தமிழக அரசுக்கு வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

துபாய்: கடந்த 2013ம் ஆண்டு ஜுன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக துபாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடராஜன் ராமலிங்கம் (41) தற்பொழுது கோமாவில் உள்ளார்.

அவர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். மற்றொரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும்போது இறந்துவிட்டார்.

மருத்துவ நிர்வாகம் முயற்சிகள் பல மேற்கொண்டும் நடராஜன் கோமாவில் இருந்து மீளவில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் அவரை தாயகம் அழைத்துச் செல்லுமாறு அவரது நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனம் துபாயில் சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் ஈமான் அமைப்பினை அணுகியது.

அவரது குடும்பத்தார் ஏழ்மையின் காரணமாக வாடகை கொடுக்கக் கூட வசதியின்றி தெரிந்தவர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவரை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் அவரது குடும்பத்தினர் இருந்து வருகின்றனர்.

எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தமிழக மருத்துவமனையில் அவரை அனுமதிக்க உதவிட துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனையடுத்து தமிழக அரசு மறுவாழ்வுத்துறை கமிஷனர் அலுவலக கடிதம் எண் E1 / 3703 /2014 dt. 02.05.2014 துபாய் இந்திய துணைத் தூதரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. எனினும் துபாய் ராஷித் மருத்துவமனை நிர்வாகத்தினர், சென்னை அல்லது கடலூர் மருத்துவமனையில் நடராஜன் ராமலிங்கத்தை தாங்கள் அனுமதித்துக் கொள்கிறோம் என்ற உறுதி மொழிக் கடிதம் வழங்கப்படும் நிலையில் மட்டுமே மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவார் எனக் கூறியுள்ளனர்.

Please help this comatose tamil in Dubai: A request to CM Jayalalithaa

இது தொடர்பாக தமிழக மறுவாழ்வுத்துறை இயக்குநரக அதிகாரிகளை தொடர்பு கொண்டும் எவ்வித பலனும் இல்லை. எனவே முதல்வர் ஜெயலலிதா இவ்விஷயத்தில் உடனே தலையிட்டு கடலூர் மாவட்ட மருத்துவமனை அனுமதிக் கடிதத்தை வழங்கி உதவிட உத்தரவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

இது குறித்து தொடர்பு கொள்ள விரும்புவோர் 00971 50 467 43 99 / 00971 50 51 96 433 எனும் அலைபேசி எண்களில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு உதவிடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+