For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப்ளீஸ் லைக் போடுங்கள்... விளம்பரங்களுக்கு செலவு செய்து பேஸ்புக்கில் பிரபலமான கேமரூன்

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பேஸ்புக்கில் அதிக லைக்குகளை பெறுவதற்காக பணம் கொடுத்துள்ளார் என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளவர்கள் தங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்வது வழக்கம். அத்தகைய பதிவுகளுக்கு மற்றவர்கள் லைக் போடுவார்கள், சிலர் கமெண்ட் போடுவார்கள்.

பொழுதுபோக்காக ஆரம்பிக்கப் பட்ட இந்த பழக்கம் தற்போது பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. பல தலைவர்கள் தங்களது புகழைப் பரப்ப பேஸ்புக்கை ஒரு களமாகப் பயன் படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் பேஸ்புக்கில் உள்ளார். இவர் தனது நண்பர்களுடனான போட்டியில் வெற்றி பெறுவதற்காக பேஸ்புக் இணையதளத்திற்கு பணம் கொடுத்துள்ளார் என்று தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

துணைப்பிரதமர்...

துணைப்பிரதமர்...

இங்கிலாந்தின் துணை பிரதமர் நிக் கிளெக்கிற்கு கடந்த மாதம் பேஸ்புக் வாயிலாக 80 ஆயிரம் பேர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

திடீரென உயர்ந்த லைக்குகள்...

திடீரென உயர்ந்த லைக்குகள்...

பேஸ்புக்கில் இருந்த கேமரூனுக்கு 20 ஆயிரம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், திடீரென தற்போது 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவரது பேஸ்புக் பக்கம் தெரிவிக்கிறது.

ஆச்சர்யம்... ஆனால் உண்மை

ஆச்சர்யம்... ஆனால் உண்மை

இந்த தீடீர் ஆதரவு கேமரூனுக்கு எப்படி சாத்தியமானது எனப் பலரும் ஆச்சர்யப்பட்டனர். ஆனால், கேமரூனை பயன்பாட்டாளர்கள் பார்க்கும் வகையில் அதற்கான விளம்பரங்களை பிரபலப்படுத்த ஆயிரக்கணக்கில் பணம் செலவிடப்பட்டு உள்ளது தற்போது அம்பலமாகியுள்ளதாம்.

பிரச்சாரத்திற்கு செலவு...

பிரச்சாரத்திற்கு செலவு...

விளம்பர தகவல்களை பேஸ்புக் பொதுவாக வெளியிடுவது இல்லை. ஆனால் மார்க்கெட்டிங் நிபுணர்கள் கூறும்போது, கட்சியின் நிதி 7 ஆயிரத்து ஐநூறு பவுண்டு வரை இது போன்ற பிரசாரத்திற்கு செலவு செய்யப்பட்டு இருக்கும் என தெரிவித்துள்ளனர்

பணம் கொடுத்து புகழ்..

பணம் கொடுத்து புகழ்..

இது குறித்து தொழிலாளர் கட்சி எம்.பி. ஷீலா கில்மோர் கூறும்போது, புகழை பணம் கொடுத்து கேமரூன் வாங்குவதாக தெரிகிறது. போலியான பேஸ்புக் நண்பர்களுக்கு செலவிடும் அவரது ஈகோவுக்கு முடிவே கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

போனுடன் கேமரூன்...

போனுடன் கேமரூன்...

இது ஒருபுறம் இருக்க, கடந்த வாரம் உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் கேமரூன் தொலைபேசியில் பேசினார். இதனை அடுத்து கேமரூன் போனில் பேசுவது போன்ற புகைப்படம் ஒன்று பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளிவந்தது.

டப்புடன் ஸ்டூவர்ட்...

டப்புடன் ஸ்டூவர்ட்...

ஆனால், அதனை கிண்டல் செய்யும் விதமாக நடிகர் பேட்ரிக் ஸ்டூவர்ட் கையில் டப் ஒன்றை வைத்திருப்பது போன்ற புகைப்படம் வெளிவந்து அது கேமரூனின் புகைப்படத்தை ஓரம் தள்ளியது.

அம்பலமான ரகசியம்...

அம்பலமான ரகசியம்...

இந்த சம்பவத்தை தொடர்ந்து கேமரூனின் பேஸ்புக் விவகாரம் தற்பொழுது வெளியே தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
David Cameron was last night mocked for his ‘endless ego’ after paying to win friends on Facebook. Tory Party chiefs have spent thousands on advertisements on the social media site to encourage users to ‘like’ the Prime Minister’s page. And the strategy has worked. Just over a month ago, Mr Cameron was almost 20,000 ‘likes’ behind Deputy Prime Minister Nick Clegg’s 80,000 – but now he has 127,000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X