புளூட்டோவின் குட்டி குட்டி நிலாக்களை அழகழகாக போட்டோ எடுத்த நாஸா விண்கலம்
வாஷிங்டன்: சூரிய மணடலத்தில் உள்ள மிகச்சிறிய கிரகமான புளூட்டோவின் குட்டி குட்டி நிலாக்களான நிக்ஸ் மற்றும் ஹைரோவை படம் எடுத்து அனுப்பியுள்ளது நாசாவின் நியூ ஹோரிசோன்ஸ் விண்கலம்.
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புளூட்டோ மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும் மிகச்சிறியது. இது கடந்த 1930ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் பின்னர் சர்வதேச வானியல் ஆய்வு கழகம் இதை சூரிய மண்டலத்தில் ஒரு கிரகமாக சேர்க்கக்கூடாது என்று தீர்மானித்து அதை குட்டிக்கிரகமாக அறிவித்தது.

நியூ ஹோரிசான்ஸ்...
புளூட்டோவை ஆராய நாசாவால் நியூ ஹோரிசான்ஸ் விண்கலம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பட்டது. அதை மேரிலேண்டில் உள்ள லாரல் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானிகள் வடிவமைத்து அனுப்பினர். தற்போது அந்த விண்கலம் புளூட்டோவையும், அதன் மேற்பரப்பையும் விதவிதமாக புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது.

நிக்ஸ், ஹைடிரோ...
இந்நிலையில், தற்போது புளூட்டோவின் நிக்ஸ் மற்றும் ஹைடிரோ என்ற இரண்டு துணைக்கோள்களின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படங்கள் ஜனவரி 27ம் தேதியிலிருந்து பிப்ரவரி 8ம் தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் எடுக்கப் பட்டவை.

குறும்படம்...
இந்த புகைப்படங்களின் உதவியோடு நாசா விஞ்ஞானிகள் சிறிய குறும்படம் போன்ற ஒன்றைத் தயாரித்துள்ளனர். அதில், இந்த இரண்டு துணைக்கோள்களும் புளூட்டோவை எவ்வாறு சுற்றி வருகின்றன என்பது விளக்கப்பட்டுள்ளது.

பெரிய நிலா...
ஹைடிரோ, புளூட்டோவின் பெரிய நிலவாகும். அது புளுட்டோவை 38 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இது புளுட்டோவிலிருந்து 64,700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

நிக்ஸ்...
அதேபோல நிக்ஸ், புளுட்டோவிலிருந்து 48,700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது 25 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.

மேலும் இரண்டு...
மேலும் இரண்டு குட்டி நிலவுகளும் புளுட்டோவுக்கு உள்ளது. அவற்றின் பெயர் ஸ்டைக்ஸ் மற்றும் கெர்பெரோஸ். அவை மிகவும் மங்கலாக தெரிபவை. இவை போக சரான், பிளென்ட்ஸ், ஆகியவையும் உள்ளன.

மொத்தக் குடும்பமும் சிக்கியது
உண்மையில் மொத்த குடும்பமும் கையும் களவுமாக சிக்கியது போல இது. அதாவது புளுட்டோ மற்றும் அதன் அனைத்து நிலவுகளையும் இதில் பார்க்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக...
மேலும் புளுட்டோவின் நிலவுகளான கெர்பரோஸ் மற்றும் ஸ்டிக்ஸ் ஆகியவை முதல் முறையாக போட்டோவில் சிக்கியள்ளன. இவை மிகவும் சிறிய மங்கலான நிலவுகள் ஆகும்.

யார் யார் எப்போது...
புளுட்டோவின் நிலவுகளில் சரோன் 2013ம் ஆண்டிலும், ஹைடிரோ, நிக்ஸ் ஆகியவை முறையே 2014, 2015ம் ஆண்டிலும் கண்டறியப்பட்டவை ஆகும். கெர்பரோஸ் 2011ம் ஆண்டு கண்டுபிடிக்கப்ட்டது. ஸ்டிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 2012 ஆகும். ஹப்பிள்தான் இதையும் கண்டுபிடித்தது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications