ரஷ்ய பயணம் நிறைவு.. ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு கிடைத்த உற்சாக வரவேற்பு!
மாஸ்கோ: ரஷ்ய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, ஆஸ்திரியா சென்றார். தனி விமானம் மூலம் ஆஸ்திரியாவின் வியன்னா சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவும், ரஷியாவும் நீண்ட காலமாக நல்லுறவவை பேணி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே உச்சி மாநாடும் அவ்வபோது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 22-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு ரஷ்யாவில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்று 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் ரஷ்யா சென்றார். மாஸ்கோவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் மாலையில் அதிபர் புதின் இல்லத்தில் அவரை சந்தித்தார். மாஸ்கோவின் புறநகர் பகுதியான நோவோ - ஒகாரியோவோவில் உள்ள வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரு நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு நடந்தது.
இதில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர். முக்கியமாக ராணுவம், வர்த்தகம், முதலீட்டு உறவு, எரிசக்தி ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மறுஆய்வு செய்தனர்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பின்னர் அக்டோபர் மாதம் ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கும் வருமாறு பிரதமர் மோடிக்கு புதின் அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய செயின்ட் ஆண்ட்ரூ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ரஷ்ய அதிபர் புதின் வழங்கி கவுரவித்தார்.
இதைத்தொடர்ந்து ரஷ்யாவில் 2 நாட்கள் பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி மாலையில் ஆஸ்திரியா புறப்பட்டு சென்றார். தனி விமானம் மூலம் ஆஸ்திரியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரியா அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications