மோடிக்கு குஜராத் ஸ்பெஷல் உணவு வகைகளை விருந்தளித்து அசத்திய போர்ச்சுகல் பிரதமர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா குஜராத்தின் ஸ்பெஷல் சைவ உணவுகளை வழங்கி அசத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 3 நாள் பயணத்தின் முதல் கட்டமாக இன்று போர்ச்சுகல் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்நாட்டு பிரதமர் அண்டோனியோ கோஸ்டாவை சந்தித்து மோடி பேசினார்.

PM Modi Enjoys Gujarati Vegetarian Meal

அதன்பின்பு, பிரதமர் மோடிக்கு போர்ச்சுகல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா மதிய விருந்து அளித்தார். அதில், குஜராத்தின் ஸ்பெஷல் சைவ உணவு வகைகள் இருந்ததை கண்டு மோடி ஆச்சரியம் அடைந்தார்.

இந்த ஸ்பெஷல் மதிய உணவுக்கான மெனு கார்டை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்ளே அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போர்ச்சுகல் பயணத்தை அடுத்து பிரதமர் மோடி அமெரிக்க செல்ல உள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் நாளை சந்திக்கிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Portugal Prime Minister Antonio Costa arranged a special Gujarati meal at the lunch hosted for PM Narendra Modi
Please Wait while comments are loading...