எம்ஜிஆர் பாடலுக்கு தீவிர ரசிகர்.. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பற்றி மோடி பகிர்ந்த சுவாரசியம்!
கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழில் எம்ஜிஆர் பாடல்கள் மீது ஆர்வம் கொண்டவர் என்று கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி இன்று காலை மலேசியா புறப்பட்டு சென்றார். 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி மலேசியா சென்றுள்ளார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேரில் சென்று வரவேற்றார். பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பிறகு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் காரில், பிரதமர் மோடி ஒன்றாக பயணித்தார். கோலாலம்பூரில் மலேசிய வாழ் இந்தியர்களுக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். 800 நடன கலைஞர்கள் நடனமாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமர் மோடி பேசியதாவது:
‛‛மலேசியா என்பது இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் 2வது பெரிய நாடாக உள்ளது. இந்தியா - மலேசியாவை இணைக்கும் பாலமாக ஏராளமான இதயங்கள் இங்கே உள்ளனர். நீங்கள் (இந்திய வம்சாவளியினர்) தான் இருநாடுகளையும் இணைக்கும் வாழும் பாலமாக உள்ளீர்கள். இருநாடுகள் இடையே உணவு பழக்கவழக்கம், மொழி ஒற்றுமைகள் உள்ளன.
உலகம் முழுவதும் இந்தியாவுக்கான இணைப்பு பாலமாக தமிழ் உள்ளது. தமிழ் கலாசாரம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. தமிழ் இலக்கியங்கள் மிகவும் பழமையானது. மலேசியாவில் 3 சதவீதம் பேர் தமிழ் பேசுகிறார்கள். அதோடு மலேசியா அரசு தமிழ் மொழிமை சிறுபான்மை மொழியாக அங்கீகரித்துள்ளது.
இந்திய திரைப்படங்கள், பாடல்கள் மலேசியாவில் பிரபலம் என்பதை நான் கேள்விப்ட்டு இருக்கிறேன். நீங்கள் கூட அறிந்து வைத்திருப்பீர்கள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் நன்றாக பாடல் பாடக்கூடியவர் என்பதை.. இந்தியாவில் அவர் பாடிய பழைய இந்தி மொழிப்பாடல் தொடர்பான வீடியோக்கள் வைரலாகின. எம்ஜிஆரின் தமிழ் பாடல்களை அதிகம் விரும்பக்கூடியவர் என்பது அற்புதமான விஷயம்'' என்று கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications