ஜி ஜின்பிங்குடன் - மோடி சந்திப்பு.. 7 ஆண்டுகளுக்கு பின் சீனாவில் நடந்த சுவாரசியம்.. பேசியது என்ன?
பெய்ஜிங்: சீனாவில் இன்றும், நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தனர். இதுபற்றி சுவாரசிய தகவல் வருமாறு:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒவ்வொரு நாடுகளுக்கும் அதிகப்பட்சமாக வரிகளை விதித்து வருகிறார். அந்த வகையில் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இது நம் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் சீனாவையும் டிரம்ப் தொடர்ந்து மிரட்டி வருகிறார். சீனாவுக்கு மொத்தம் 145 சதவீதம் வரை சீனாவுக்கு, டிரம்ப் வரி விதித்தார். பதிலுக்கு சீனாவும், 135 சதவீத வரியை அமெரிக்காவுக்கு விதித்தது. இதையடுத்து இருநாடுகளுக்கு நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. தற்போது சீனாவுக்கு 30 சதவீத வரி மட்டும் டிரம்ப் அமல்படுத்தி உள்ளார். மற்ற வரிகளை நிறுத்தி வைத்துள்ளார்.
சீனா - இந்தியா கைகோர்ப்பு
டிரம்பின் இந்த மிரட்டல் காரணமாக பகையை மறந்து இந்தியாவும், சீனாவும் ஒன்றாக சேர்ந்துள்ளது. இந்தியா மீது போடப்பட்டுள்ள வரிக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் தற்போதைய உலக பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் உள்ளது.
இதனால் உலக பொருளாதாரத்தை சரிசெய்ய சீனாவும், இந்தியாவும் சேர்ந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். இந்நிலையில் தான் நேற்று ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றார்.
சீனாவில் பிரதமர் மோடி
சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி அங்கு சென்றார். மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடைசியாக கடந்த 2018 ம் ஆண்டில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார்.
அதன்பிறகு 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை பிரச்சனையில் இருநாடுகளின் வீரர்களும் மோதிக்கொண்டதால் இந்தியா - சீனா உறவில் விரிசல் ஏற்பட்டது. இப்போது டிரம்பின் வரி விதிப்பால் இருநாடுகள் இடையே உறவு புதுப்பொலிவு பெறுகிறது.
ஜி ஜின்பிங்குடன் சந்திப்பு
இந்நிலையில் தான் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியிடம் கைக்குலுக்கி ஜி ஜின்பிங் வரவேற்றார். இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக அவர்கள் இருவரும் ஆலோசித்தனர். குறிப்பாக எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றி மோடி - ஜி ஜின்பிங் பேசினர். இது பாசிட்டிவ் சைனாக பார்க்கப்படுகிறது.
ஷாங்காய் அமைப்பின் பின்னணி
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது கடந்த 2001ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது மொத்தம் 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பொலாரஸ் உள்ளிட்ட நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.
இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் உலக மக்கள்தொகையில் 64 சதவீதத்தை கொண்ட நாடுகள் இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த அமைப்பு நினைத்தால் உலக வர்த்தகம் உள்பட பிற விஷயங்களை மாற்றும் திறன் கொண்டதாக உள்ளது. இதனால் தான் ஷாங்காய் அமைப்புக்கும் எப்போதும் கவனம் பெறும். அதேபோல், வல்லரசு நாடுகளாக உள்ள சீனா, ரஷ்யாவுடன் இந்தியா இருப்பது இந்த அமைப்புக்கு பெரிய வலிமையாக பார்க்கப்படுகிறது.
அமைப்பின் நோக்கம் என்ன?
யூரேசிய அரசியல், பொருளாதார, சர்வதேச பாதுகாப்பை மையப்படுத்தி இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநாட்டை ஒவ்வொரு நாடுகள் நடத்தும். அந்த வகையில் இந்த முறை சீனா மாநாட்டை தலைமையேற்று நடத்தி உள்ளது.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாக பிற நாடுகளின் தலைவர்கள் என்று மொத்தம் 30க்கும் அதிகமான தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications