Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெய்ரோ சென்றடைந்தார் பிரதமர் மோடி.. சிவப்பு கம்பள வரவேற்பு.. எகிப்து பிரதமரை கட்டியணைத்து உற்சாகம்!

Subscribe to Oneindia Tamil

கெய்ரோ: எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார் இந்திய பிரதமர் மோடி. 26 ஆண்டுகளுக்கு பிறகு எகிப்து சென்றுள்ள இந்திய பிரதமருக்கு சிவப்புக் கம்பள வரவேற்டன் ராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்திலும் சிறப்புரை ஆற்றினார் பிரதமர் மோடி.

 PM Modi lands in Egypt for the first bilateral visit by an Indian PM after 26 years

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரைச் சந்தித்து சிறப்பு விருந்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி. பின்னர் துணை அதிபர் கமலா ஹாரிஸ், வெளியுறவு செயலர் பிளிண்டன் அளித்த சிறப்பு மதிய விருந்தில் பங்கேற்றார்.

அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், சற்று முன்பு எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி.

கெய்ரோ விமான நிலையத்தில் எகிப்து பிரதமர் முஸ்தபா, இந்திய பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றார். 1997- ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து செல்வது இதுதான் முதல் முறை. இதற்கு முன்னதாக 1997ல் இந்திய பிரதமராக இருந்த ஐகே குஜ்ரால் எகிப்து பயணம் மேற்கொண்டிருந்தார்.

எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட எகிப்து அதிபர் எல்-சிசி மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதன்பேரில் எகிப்துக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி.

எகிப்து நாட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஷியா மஸ்ஜித் அல்-ஹக்கிமையும் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு இந்த பயணம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

எகிப்து அதிபர் உடனான பேச்சுவார்த்தை தவிர, பிரதமர் மோடி எகிப்திய அரசின் முக்கிய பிரமுகர்கள், எகிப்தில் உள்ள இந்திய சமூகத்துடன் தொடர்பு கொள்வார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவிற்கும் எகிப்துக்கும் இடையிலான உறவுகள், பண்டைய வர்த்தகம் மற்றும் பொருளாதார தொடர்புகள் மற்றும் கலாச்சார உறவுகளை இந்தப் பயணம் வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+