21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது.. ஆசியன் உச்சி மாநாட்டில் அழுத்தமாக சொன்ன பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

: ஆசியன் - இந்தியா அமைப்பின் 21 -வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, நமது இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளோம். 21-ம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு ஆகும். அது இந்தியாவுக்கும், ஆசியானுக்குமானது என்று பேசினார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா இணைந்த ஆசியன் - இந்தியா அமைப்பின் 21 -வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி லாவோஸ் புறப்பட்டு சென்றார். கம்போடிய மற்றும் வியட்நாம் அருகே உள்ள லாவோஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது இது 11-வது முறையாகும்.

pm-modi-meets-japan-new-zealand-pm-on-the-sidelines-of-asean-summit

இதில் இந்தியாவுக்கும், ஆசியன் உறுப்பு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், "உலகளாவிய தெற்கில் இந்தியாவும் ஆசியான் அமைப்பும் அண்டை நாட்டினராக, பங்காளிகளாக உள்ளன. உலகின் வேகமாக வளரும் பிராந்தியத்தை உருவாக்கி உள்ளன.

நாம் அமைதியை நேசிப்பவர்கள் ஒருவர் மற்றவரின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிப்பவர்கள். நமது இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளோம். 21-ம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு ஆகும். அது இந்தியாவுக்கும், ஆசியானுக்குமானது" என்றார். இந்த மாநாட்டிற்கு இடையே, மாநாட்டில் கலந்து க் கொண்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

அந்த வகையில் ஜப்பான் புதிய பிரதமர் ஷிகேரு இஷிபா, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார். ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் மிகவும் ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றது என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி கூறுகையில், "ஜப்பான் பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் பலவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் எங்களின் பேச்சுக்கள் அமைந்தது. கலாசார தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது" எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+