Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PM Modi: மலேசியாவில் திருமறை பக்தி பாடல்களை பாராயணம் செய்த மாணவர் குழு.. மனமுருகி கேட்டு ரசித்த பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: மலேசியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் மோடியை 800 நடன கலைஞர்கள் நடனமாடி வரவேற்றனர். தொடர்ந்து மலேசிய இந்து சங்கத்தை சேர்ந்த மாணவர் குழுவினர் திருமுறை பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்தனர். அதை பிரதமர் மோடியும் மனமுருகி கேட்டு ரசித்தார். பின்னர் இது குறித்து மோடி தமிழில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார். மலேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி தொடர்ச்சியாக பங்கேற்றுள்ளார். தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வரும் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் இணைந்து பங்கேற்றார்.

PM Modi Moved by Students Recital of Sacred Devotional Hymns in Malaysia

மலேசியாவில் பிரதமர் மோடி

உலக அளவில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் நாடுகளில் 2-வது இடத்தில் மலேசியா உள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர். எனவே இந்த நிகழ்ச்சியில் தமிழ் உள்பட பல்வேறு இந்திய மொழிகளில் வாழ்த்துக்கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அப்போது தமிழ் மொழியை அவர் வெகுவாக பாராட்டினார்.

மேலும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமின் பாடும் திறன், குறிப்பாக எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்கள் மீதான அவரது நேசத்தையும் புகழ்ந்துரைத்தார். முன்னதாக பிரதமர் மோடியை 800 நடன கலைஞர்கள் நடனமாடி வரவேற்றனர். இந்திய பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்களை அரங்கேற்றினர்.

குறிப்பாக பரதநாட்டியம், கதகளி, குச்சிப்புடி, ஒடிசி உள்ளிட்ட நடனங்களை ஆடி மகிழ்வித்தனர். பின்னர் இந்த நடன நிகழ்ச்சி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடியும், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமும் ஒரே காரில் சென்றனர்.

பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

அவர்கள் ஒன்றாக மேடையேறியபோது 'பாரத் மாதா கி ஜே', 'மோடி, மோடி' என கூட்டத்தினர் ஆர்ப்பரித்தனர். அதன்பிறகு நிகழ்ச்சி ஒன்றில் மலேசிய இந்து சங்கத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர் திருமுறை பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்தனர். அதை பிரதமர் மோடி மனமுருகி கேட்டு ரசித்தார்.

இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் மோடி பதிவிட்டுள்ளர். பிரதமர் மோடி அந்த பதிவில் கூறியிருப்பதாவது:- "மலேசிய இந்து சங்கத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர் திருமுறை பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்தனர். மலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகம் தங்களின் பாரம்பரியத்தைக் கடந்த பல ஆண்டுகளாகப் பாதுகாத்து, பிரபலப்படுத்தி வருவது பாராட்டத்தக்கது" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+