சீனாவின் “பீஸ்ட்” நெருங்க கூட முடியாது.. பிரதமர் மோடி பயணித்த காரில் இவ்ளோ வசதிகளா?
பீஜிங்: பிரதமர் மோடி தனது சீன பயணத்தின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் எல் 5 லிமோசின் காரை பயன்படுத்தியிருக்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங் எங்கு சென்றாலும் இந்த ரக கார்களையே பயன்படுத்துகிறார். இந்த காரில் உள்ள சிறப்புகள், பாதுகாப்பு அம்சங்கள் அமெரிக்க அதிபர் பயன்படுத்தக்கூடிய பீஸ்ட் கார்களுக்கு நிகராக உள்ளதாக சொல்லப்படுகிறது. சீனாவில் மோடி பயன்படுத்திய லிமோசின் காரின் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க சீனாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். சீனப் பயணத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனாவின் ஹொங்க்கி L5 லிமோசின் காரில் பிரதமர் மோடி பயணம் செய்தார். இந்த வகை கார் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ வாகனமாகவும், சீன உயர்மட்டத் தலைவர்களுக்கும், குறிப்பிட்ட வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கும் மட்டுமே பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

L5 காரில் பயணம் செய்த மோடி
கடந்த 2019-ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது சீன அதிபர் ஜி ஜின்பிங் இதே L5 காரில் பயணம் செய்தார். சீன அதிபருக்கு மிகவும் பிடித்தமான இந்த காரில்தான் இன்று பிரதமர் மோடி பயணம் செய்து இருக்கிறார். மோடி பயணம் செய்த இந்த Hongqi L5 limousine காரில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் பார்க்கலாம்.
சீனாவின் முதன்மை மாடல்
"ஹொங்க்கி" என்ற பெயருக்கு சீனாவின் மாண்டரின் மொழியில் "சிவப்பு கொடி" என்று அர்த்தம். இது சீன அரசின் கீழ் இயங்கும் ஃபர்ஸ்ட் ஆட்டோமொபைல் ஒர்க்ஸ் (FAW) குழுமத்தால் நடத்தப்படுகிறது. 1958-ல் தொடங்கப்பட்ட ஹொங்க்கி நிறுவனம், சீனாவின் பழமையான பயணிகள் கார் பிராண்டாகும். "மேட் இன் சீனா" கனவின் அடையாளமாக, சீனாவில் வசதிப்படைத்த எலிட் தரப்பை மக்களை கவரும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட ஹொங்க்கி கார்கள், 1981-ல் உற்பத்தியை நிறுத்தியது. பின்னர் 1990-களில் மீண்டும் உற்பத்தியை தொடங்கியது. தற்போது, L5 லிமோசின் ஹொங்க்கியின் மிகவும் பிரபலமான மற்றும் முதன்மை மாடலாக சீனாவில் உள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஹொங்க்கி L5 கார் 6.0 லிட்டர் V12 என்ஜினைக் கொண்டுள்ளது. இது 400 குதிரைத்திறனுக்கு மேல் உற்பத்தி செய்யும். இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு சுமார் 210 கி.மீ. ஆகும். இந்த கார் 5.5 மீட்டருக்கும் (18 அடி) மேல் நீளமும், 3 டன்களுக்கும் மேல் எடையும் கொண்டது.
காரின் உள்பகுதியில் விசாலமான இருக்கைகள், லெதர் உறைகள், மர வேலைப்பாடுகளுடன் கவரும் இன்டீரியர்களைக் கொண்டதாக உள்ளது. பின் இருக்கைகளில் மசாஜ், ஹீட்டிங் வசதி, காற்றோட்டம் மற்றும் பொழுதுபோக்கு திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கார் ஃபோர் வீல் டிரைவ் (all-wheel drive), அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பார்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமராக்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன. இந்தக் காரின் விலை சுமார் 5 மில்லியன் யுவான், அதாவது தோராயமாக ரூ.7 கோடி ஆகும். இது சீனாவில் தயாரிக்கப்படும் கார்களிலேயே மிகவும் விலை உயர்ந்தது.
ஹொங்க்கி கார்கள்
2018-ல், FAW நிறுவனம் ஹொங்க்கியை புதிய வடிவமைப்பு மற்றும் "மேட் இன் சீனா" ஆடம்பர அடையாளத்துடன் மீண்டும் அறிமுகப்படுத்தியது. 2018-ல் 33,000 ஆக இருந்த விற்பனை, 2021-ல் 300,000 ஆக உயர்ந்தது. 2023-ல், மிக ஆடம்பரமான வாடிக்கையாளர்களுக்காக கோல்டன் சன்ஃப்ளவர் லைன், மின்சார வாகனங்களுக்காக நியூ எனர்ஜி லைன், மற்றும் QM7 மினிபஸ் போன்றவற்றை சேர்த்தது. 2024-ல் விற்பனை 411,000-ஐ தாண்டியது. ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 1,000 வெளிநாட்டு விற்பனை நிலையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் பொது நிகழ்வுகளில் ஹொங்க்கி L5 காரை அடிக்கடி பயன்படுத்துவது பார்க்க முடியும். ஹொங்க்கி N701 என்ற புதிய கவச லிமோசின் காரிலும் சமீபகாலமாக பயணம் செய்கிறார். இது அமெரிக்க அதிபரின் கார் "தி பீஸ்ட்" உடன் ஒப்பிடப்படுகிறது. அந்த அளவுக்கு அதி நவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளதாம்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications