நம் உறவு வரலாற்று பொக்கிஷம், அதை பாதுகாப்போம்: பூடான் நாடாளுமன்றத்தில் மோடி உரை
திம்பு: இந்தியா-பூடான் இடையேயான உறவு வரலாற்று பொக்கிஷம் என்று பூடான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை பூடான் சென்றார். அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் பூடான் தலைநகர் திம்புவில் உள்ள நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,

கௌரவம்
பூடான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது எனக்கு கிடைத்த கௌரவம். முன்னேற்றம், பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் பூடானுக்கு என் வாழ்த்துக்கள்.

ஜனநாயகம்
விழிப்புணர்வு மற்றும் ஜனநாயக பாரம்பரியம் மூலம் பூடான் தனது மக்களிடையே ஜனநாயகத்தை கொண்டு வந்துள்ளது. ஒரு நாட்டில் ஜனநாயகத்தின் சக்தி அதன் பகுதிக்கும், மக்களுக்கும் முக்கியமானது. மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பூடான் அரச குடும்பத்திற்கு என் வாழ்த்துக்கள்.

நன்றி
ராஷ்ட்ரபதி பவனில் நடந்த பதவியேற்பு விழாவுக்கு வந்த பூடான் பிரதமர் மற்றும் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா
இந்தியா எவ்வளவு வலுவாக உள்ளதோ அது பூடான் மற்றும் சார்க் நாடுகளுக்கு அவ்வளவு நல்லது. அண்டை நாடுகளுக்கு உதவ வலுவான, நிலையான இந்தியா தேவை. இந்தியா எவ்வளவு வளம் பெறுகிறதோ பூடானும் அவ்வளவு வளம் பெறும்.

உறவு
அரசு மாறுவது இந்தியா-பூடான் இடையேயான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்தியா-பூடான் இடையேயான உறவு வலுவான பாரம்பரியத்தின் அடிப்படையிலானது. இந்த உறவு வரலாற்று பொக்கிஷம். அதை பாதுகாப்பதும், வலுப்படுத்துவதும் நம் கடமை.

மன்னர்
மன்னர் ஆட்சியில் இருந்து அமைதியான முறையில் ஜனநாயக நாடாக பூடான் மாறியிருப்பது அதன் வெற்றியை காட்டுகிறது.

பூடான்
நாட்டிற்கு சேவை செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் பிரதமர் ஆன பிறகு முதன் பயணமாக சக்திவாய்ந்த நாட்டுக்கு செல்ல விரும்பால் பூடானுக்கு வரவே விரும்பினேன். பூடானின் முன்னேற்றம் ஒரு உந்து சக்தியாக உள்ளது.

இ-நூலகம்
அண்டை நாடுகளுடன் நட்பாக இருக்க நாங்கள் திறந்த இதயத்துடன் உள்ளோம். அறிவு மற்றும் தொழில்நுட்பம் மூலம் வளர்ச்சி அடைய பூடானுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதற்காக இ-நூலக நெட்வொர்க் அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

கல்வி
2014ம் ஆண்டு பட்ஜெட்டில் பூடான் கல்விக்கு அதிக தொகையை ஒதுக்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவும், பூடானும் தங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்வது இளைஞர்களுக்கு நல்லது.

இமய மலை
நம்மை இமய மலை ஒன்று சேர்க்கிறது. நாம் இமய மலையை நினைத்து பெருமைப்பட வேண்டும். அது தான் நம் பலம். இந்தியா மற்றும் பூடான் இமய மலை மீது அதிக மரியாதை வைத்துள்ளது. இமய மலையோரம் உள்ள மாநிலங்களும், பூடானும் சிறப்பு விளையாட்டு போட்டிகளை நடத்துமா?

செயக்கைக்கோள்
இந்தியாவின் செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் பூடானுக்கு பயன்படுமா என்பது குறித்து நம் விஞ்ஞானிகள் சிந்திக்க வேண்டும்.

எரிபொருள்
எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்வது தான் வருங்காலத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் என்று மோடி தெரிவித்துள்ளார்.
பூடான் நாடாளுமன்றத்தில் மோடி உரை
பூடான் நாடாளுமன்றத்தில் மோடி உரை
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications