ஜப்பானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கியோட்டாவில் பிரதமர் அபேவுடன் சந்திப்பு!!
டோக்கியோ: ஜப்பானுக்கு ஐந்து நாள் பயணமாக சென்று சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிற்பகலில் அந்நாட்டு பிரதமர் அபேவை கியோட்டாவில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரமர் நரேந்திரமோடி ஜப்பானின் கியோட்டோவிற்கு இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்றடைந்தார்.
இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை கியோட்டோ நகரில் சந்தித்து பேசினார். அப்போது இருபிரதமர்களும், வாராணசி, கியோட்டோ நகர்களுக்கிடையேயான கலாச்சார பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பின்னர் கியோட்டோ நகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் மோடி ஓய்வெடுக்க சென்றார்.. இன்று இரவு மோடிக்கு டோக்கியோவில் அபே விருந்தளிக்கிறார். அப்போது ஷின்சோ அபேயுடன் இருநாட்டு உறவுகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரதமரின் இந்த பயணத்தின்போது, இந்தியா - ஜப்பானிடையே பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, அணு ஆற்றல் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானில் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வரும் ஸ்மார்ட் நகரத்தை பார்வையிட உள்ள மோடி, இந்தியாவிலும் அதுபோன்ற 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன்னதாக டிவிட்டர் இணைய தளத்தில், தனது ஜப்பான் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என மோடி தெரிவித்துள்ளார். ஆசிய பிராந்தியத்தில் இந்தியா வளம் பொருந்திய நாடாக மாறுவது தொடர்பான தனது எண்ணங்களை செயல்படுத்தவும் இந்த பயணத்தின் மூலம் வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆசியாவின் இரண்டு பாரம்பரியமிக்க ஜனநாயக நாடுகளான இந்தியா, ஜப்பான் உறவில் ஒரு புதிய அத்தியாயமாக தனது இந்த பயணம் அமையும் என்றும் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications