எந்த ஆட்சியில் நடந்தாலும் பலாத்காரங்கள் கண்டனத்திற்குரியவை.... அரசியலாக்க வேண்டாம் என மோடி வேதனை!
பலாத்கார சம்பவங்கள் எந்த அரசாங்கத்தில் நடந்தாலும் கவலைதரக்கூடியது, அதனை அரசியலாக்காதீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Recommended Video

லண்டன் : எந்த ஆட்சியின் போது நடந்தாலும் பலாத்கார சம்பவங்கள் கண்டனத்திற்குரியவை. இதனை அரசியலாக்க வேண்டாம் என்று லண்டன் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
லண்டனில் ஐகானிக் சென்டர் ஹால் வெஸ்ட் மினிஸ்டரில் நடந்த 'பாரத் கி பாத் சப்கீ சாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியல் உரையாற்றிய அவர், " நாம் எப்போதும் பெண் குழந்தைகள் வெளியே செல்லும் போது எங்கே செல்கிறார்கள், யாருடன் செல்கிறார்கள், என்ன காரணத்திற்காக செல்கிறார்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கிறோம். இதே கேள்விகளை ஆண் குழந்தைகளிடமும் கேட்க வேண்டும்."

பாலியல் பலாத்கார குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரோ ஒருவரின் மகன் தான் என்பதை நாம் ஏன் உணர்வதில்லை. "என்னுடைய ஆட்சியிலோ அல்லது அதற்கு முந்தைய ஆட்சியிலோ எத்தனை பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை நான் எண்ணிப்பார்க்க விரும்பவில்லை. பாலியல் பலாத்காரம் என்பது குற்றம், அது கண்டனத்திற்கு உரியது. இது போன்ற குற்ற சம்பவங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
ஒரு தேசத்தின் மகள் சீரழிக்கப்படுகிறாள் என்றால் அது ஒட்டு மொத்த நாட்டிற்குமே அவமானமான விஷயம் என்றும் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். லண்டன் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்குள்ள போராட்டக்காரர்கள் 8 வயது காஷ்மீர் சிறுமியின் கொமூர கொலை குறித்து புகைப்படங்களை காட்டி மோடிக்கு எதிராக குரல் எழுப்பினர்.
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய கத்துவா மற்றும் உன்னாவ் பாலியல் பலாத்கார நம்பவங்கள் தொடர்பாக முறையான நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் குற்றவாளிகள் நிச்சயம தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கத்துவா மற்றும் உன்னாவ் சம்பவங்களுக்காக தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான தாக்குதல்களை முன்வைத்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை ராகுல்காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2016 முதல் நாட்டில் 19,675 பலாத்கார சம்பவங்கள் நடந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications