“நீங்கள் சிந்திய வியர்வைதான் என்னை இங்கு கூட்டி வந்துள்ளது”.. சவுதியில் நெகிழ்ந்த மோடி
ரியாத்: சவுதி சுற்றுப்பயணத்தின் போது, அங்குள்ள இந்திய பணியாட்களுடன் அமர்ந்து மோடி சாப்பிட்ட படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார் பிரதமர் மோடி. அப்போது, ரியாத்தில் இந்தியப் பணியாட்களைச் சந்தித்த மோடி, அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பாடும் சாப்பிட்டார்.
இந்த சந்திப்பின் போது, இந்திய பணியாட்கள் மத்தியில் பேசிய மோடி, "உங்களுடைய வியர்வையும் உழைப்பும் தான் என்னை இங்குக் கூட்டி வந்திருக்கின்றது. உங்களுடைய சந்தோஷமே என்னுடைய சந்தோஷமும். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் நானும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது" என்றார்.
|
எல் அண்ட் டி ஊழியர்கள்...
எல் அண்ட் டி நிறுவன ஊழியர்களின் குடியிருப்புக்கே சென்று, அங்கிருந்தவர்கள் மத்தியில் பேசிய மோடி, அங்கிருந்தவர்களிடம் நரேந்திர மோடி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வலியுறுத்தினார்.

மோடி செயலி...
மேலும், இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் தான் மக்களின் சட்டைப் பாக்கெட்டிலேயே இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

வியர்வைத் துளிகள்...
சுமார் 17 நிமிடங்கள் அங்கு பேசிய மோடி, "உங்களுடைய வியர்வைத் துளிகள் தான் இந்தியாவின் மதிப்பு. வருங்காலத்தில், இந்தியாவில் இருந்த இளைஞர்கள் தான் இந்த மெட்ரோவைக் கட்டி முடித்தார்கள் என்று மக்கள் சொல்வார்கள். உங்கள் குடும்பங்கள் அனுப்பும் கடிதங்களை நான் படிப்பேன். அதில் நல்ல செய்தி இருந்தால் என் மனம் குளிரும். அப்படி கேட்ட செய்தியாக இருந்தால் வாடி விடும்.

பெருமை...
இந்நேரத்தில் சவுதியின் அரசரான சல்மான், ஒவ்வொரு முறை இந்தியாவைப் புகழ்ந்து பேசும் போதும் நான் பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி நடப்பேன். உங்களால் இந்தியாவிற்கு பெருமை சேர்ந்ததோடு, இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பும் ஏற்படுத்தப் பட்டுள்ளது" எனப் பாராட்டினார்.

வைரல்...
சமூகவலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், இந்தியத் தொழிலாளர்களுடன் அமர்ந்து மோடி சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications