Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகனின் முன்னாள் காதலியோடு மோதிய 50 வயது அம்மா.. இறுதியில் செம்ம.. எம்எம்ஏ சண்டையில் சுவாரஸ்யம்

Subscribe to Oneindia Tamil

வார்சா (போலந்து): தீராத பகையுடன் இருந்த தன் மகனின் முன்னாள் காதலிக்கு எதிராக கலப்பு தற்காப்பு கலை (mma fight) போட்டியில் கலந்து கொண்ட அம்மா கடுமையாக சண்டையிட்டார். போலந்து நாட்டில் நடந்த இந்த ருசிகர போட்டியில் யார் வெற்றி பெற்றார்கள்? என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

மாமியார் மருமகளுக்கு சண்டையை போட்டியாக வைத்தால் எப்படி இருக்கும்.. உண்மையில் வித்தியாசமாக இருக்கும். அதேபோல் மகனின் முன்னாள் காதலிக்கும், அம்மாவுக்கு சண்டை போட்டி நடந்தால் எப்படி இருக்கும். அது ரொம்ப விசித்திரமாக இருக்கும். ஆனால் உண்மையில் அப்படியான ஒரு விசித்திரமான போட்டி நடந்துள்ளது.

Poland: a old Woman Defeats Son’s 19 yearl old Ex-Girlfriend In MMA Fight

பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் MMA என்று அழைக்கப்படும் கலப்பு தற்காப்புக் கலை போட்டிகள் நடைபெறு வழக்கம். இருவரும் கடுமையாக மோதிக் கொள்வார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகை உண்டு.இதை பார்க்க ரசிகளும் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இந்த கலப்பு தற்காப்பு கலை போட்டிகள் ஒரே வயது அல்லது ஒரே எடை உடைய போட்டியாளர்களுக்கு இடையே நடத்தப்படுவது தான் வழக்கம்.

ஆனால் சமீபத்தில் 50 வயது பெண்ணுக்கும், 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் இடையே வித்தியாசமான முறையில் நடந்த தற்காப்பு கலை போட்டி சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 28ம் தேதி சனிக்கிழமையன்று, போலந்து எம்எம்ஏ போட்டி அமைப்பான கிளவுட் இந்த போட்டியை நடத்தியது.

19 வயதான நிகிதாவுக்கும், 50 வயதான கோசியா மேஜிக்கலின் ஆகியோருக்கு இடையே தற்காப்பு கலை போட்டி நடந்தது. இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த 31 வயது வித்தியாசத்தை தவிர, போட்டியாளர்களுக்கு இடையேயான உறவு முறை தான் ஹைலைட்டே.. இந்த போட்டியை இதுதான் சிறப்பானாதாகவும், சுவாரஸ்யமானதாகவும் ஆக்கி உள்ளது. இந்த நிகிதா வேறு யாருமல்ல, கோசியா மேஜிக்கலின் மகன் டேனியல் ஸ்வியர்சின்ஸ்கியின் முன்னாள் காதலி ஆவார்.

டேனியல் ஸ்வியர்சின்ஸ்கி (Daniel Zwierzynski) போலந்து நாட்டின் பிரபலமான இணையதள பிரபலங்களில் ஒருவர் ஆவார். அந்த சண்டை குறித்து போலந்தில் வெளியான செய்திகளின் படி, ஸ்வியர்சின்ஸ்கியின் தாயும், அவரது முன்னாள் காதலியும் பிரிந்ததில் இருந்து பெரிய பகை உணர்வுடன் இருந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் ஒரு எம்எம்ஏ போட்டியுடன் மோதிக் கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் போட்டியினை நடத்திய கிளவுட் எம்எம்ஏ வினோதமான சண்டைகளை நடத்துவதில் பெயர் பெற்ற நிறுவனம் ஆகும். அதனால் இந்த புதுமையான சண்டையை நடத்த அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இந்த சண்டையில் பலரும் 19 வயதான நிகிதா தான் வெற்றி பெறுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் 50 வயதான கோசியா மேஜிகல் போட்டியின் ஆரம்பம் முதலே வலுவாக சண்டை போட்டார். இறுதிவரை அபராமாக விளையாடி தனது மகனின் முன்னாள் காதலியை வென்றார். இதன் முலம் தான் வெற்றி பெற மாட்டேன் என்று நினைத்தவர்கள் கண்ணில் மண்ணை அள்ளி போட்டுள்ளார்.

இதனிடையே நிகிதா உடன் மோதி கோசியா மேஜிகல் வெற்றி பெறும் குத்து சண்டை வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை என்று காம்பாட் ஸ்போர்ட்ஸ் டுடே (@CSTodayNews) என்ற விளையாட்டை மையமாகக் கொண்ட ட்விட்டர் தளத்தில் வீடியோ வெளியாகி இருந்தது.இதுவரை 12 வினாடி கொண்ட சிறிய வீடியோ எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்த வித்தியாசமான போட்டியை பார்த்த நெட்டிசன்கள், கோசியா மேஜிகலை வெகுவாக பாராட்டி உள்ளனர். உங்களுக்கு எவ்வளவு வயதாகி இருந்தாலும், அற்புதமாக குத்து விட்டு, சண்டை போட்டு பெற்றுள்ளீர்கள், பாராட்டுக்கள் என கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசனோ கோசியா மேஜிகலின் மகனை கண்டித்துள்ளனர்.நீ எல்லாம் மனுஷனாய்யா, பெற்ற அம்மாவை, உன்னோட முன்னாள் காதலியோட சண்டை போட விட்டிருக்கா.. நீ எலலாம் என்ன ஆளுய்யா என்று திட்டுகிறார்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+