ட்ரம்ப்புக்கு 'மட்டையடி' கொடுத்த போலந்து அதிபரின் மனைவி... சோஷியல் மீடியாவில் கலகல!
போலந்து நாட்டிற்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு போலந்து அதிபரின் மனைவி மரியாதை நிமித்தமான கைகுலுக்கலின் போது கவனிக்காமல் சென்ற சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலானது.
வார்சா : மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது போலந்து அதிபரின் மனைவி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சட்டை செய்யாதது போல் மெலனியா ட்ரம்ப்பிற்கு கைகுலுக்கிய சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தன்னுடைய மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்ணுமான மெலனியா ட்ரம்ப்புடன் போலந்து தலைநகர் வார்சா சென்றுள்ளார். அங்கு பத்திரிக்கையாளர்களுக்காக அதிகாரப்பூர்வ புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அதிபர் ட்ரம்ப் போலந்து அதிபர் டூடாவுடன் முதலில் கை குலுக்கியுள்ளார்.
இதனையடுத்து போலந்து முதல் பெண்ணும் போலந்து அதிபரின் மனைவியுமான அகடா கொர்ஹாசர் டூடாவிற்கு கை குலுக்குவதற்காக தனது வலது கையை நீட்டியுள்ளார். ஆனால் அதை கவனிக்காத அகடா நேராக மெலனியா ட்ரம்ப்பிற்கு கைகுலுக்கியுள்ளார். இதனால் கையை நீட்டி காத்திருந்த ட்ரம்ப் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.

சரியான பதிலடி
அகடாவின் இந்த செயலை சரியான மட்டையடி என்று டுவிட்டரில் பலரும் பகிர்ந்ததால் இந்த வீடியோ வைரலானது. இதனையடுத்து சம்பவம் குறித்து விளக்கம் அளித்த போலந்து அதிபர் டூடா அகடா மெலனியாவுடன் கைகுலுக்கி விட்டு, ட்ரம்ப்புடன் கை குலுக்கியதாகவும், ஆனால் ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

தவறான புரிதல்
முதலில் ட்ரம்ப் கை நீட்டியதை கவனிக்காமல் போனாலும் அகடா மீண்டும் வந்து ட்ரம்ப்புடன் கை குலுக்கியுள்ளார். பலர் அகடாவின் செயலுக்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதோடு கவனக்குறைவாலேயே அகடா ட்ரம்ப் கை நீட்டியதை கவனிக்காமல் சென்று விட்டதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப்பிற்கே அல்வாவா?
வழக்கமாக தன்னை சந்திக்க வரும் தலைவர்களைச் சீண்டுவதை அதிபர் ட்ரம்ப் தான் வழக்கமாக வைத்திருந்தார். போப்புடன் புகைப்படம் எடுத்த போது அவரது கையைச் சுரண்டியது, மோன்டேனெக்ரோ நாட்டு பிரதமரை தள்ளிவிட்டு முன்னுக்கு வந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தது என்று அட்டகாசம் செய்து வந்தார். ஆனால் அவரையே செமயாக கலாய்த்துள்ளார் போலந்து அதிபரின் மனைவி என்பது தான் நெட்டிசன்களின் கொண்டாட்டத்திற்கு காரணம்.
|
வித்தியாச அனுபவம்
ட்ரம்ப்புடன் கைகுலுக்கும் எல்லோருக்குமே ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். கை குலுக்கும்போது எதிரே இருப்பவரின் கையைப் பிடித்து, இழுத்து, குலுக்கி பின்னர் அவர்களின் கையைத் தட்டிக் கொடுப்பது வழக்கமாக வைத்துள்ளார் ஜாலி அதிபர் ட்ரம்ப். ஆனால் அவருக்கே போலந்து அதிபர் ஒரு புதுப் பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளதால் இந்த சம்பவம் அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.
-
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
16 வயசு பிள்ளைங்களுக்கு ஷாக்.. இனி இன்ஸ்டா யூஸ் பண்ண முடியாது! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! என்னாச்சு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications