பிரபல ராப் பாடகர் மாதிரி கண்களில் டாட்டூ.. விபரீத ஆசையால் பார்வையையே இழந்த மாடல் அழகி!
கண்களில் போடப்பட்ட டாட்டூவால் போலந்து மாடல் அழகி பார்வையை இழந்துள்ளார்.
வார்சா: கண்களில் டாட்டூ போட்டுக் கொண்டதால் பார்வையையே இழந்துள்ளார் போலந்தைச் சேர்ந்த 25 வயது மாடல் அழகி ஒருவர்.
போலாந்து நாட்டின் ரோக்லாவ் நகரத்தை சேர்ந்த மாடல் அழகி அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா (25). இவர் போலந்தை சேர்ந்த பிரபல ராப் பாடகரும், குத்து சண்டை வீரருமான போபெக்கின் தீவிர ரசிகை. எனவே, போபேக் போலவே தனது கண்களிலும் கருமை நிற 'டாட்டூ போட்டுக் கொள்ள விரும்பினார் அலெக்சாண்ட்ரா.

இதற்காக அவர் முன் அனுபவமில்லாத டாட்டூ போடும் நபரை அணுகியுள்ளார். அந்நபரும் பணத்திற்கு ஆசைப்பட்டு தனக்கு கண்களில் டாட்டூ போடத் தெரியும் என அலெக்சாண்ட்ராவிடம் பொய் சொல்லியுள்ளார். இதனால் அலெக்சாண்ட்ராவும் அவரிடம் தனது கண்களில் டாட்டூ போட்டுக் கொண்டார்.
ஆனால் டாட்டூ போட்டது முதலே கண்களில் பயங்கர எரிச்சலையும், வலியையும் அலெக்சாண்ட்ரா உணர்ந்துள்ளார். இது வழக்கமானது தான் சிறிது நேரத்தில் சரியாகி விடும் எனக் கூறி, டாட்டூ போட்ட நபர் வலி நிவாரணி ஒன்றை அலெக்சாண்ட்ராவிற்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அலெக்சாண்ட்ரா தனது இடது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்படவே, பயந்து போய் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது கண்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், முறைப்படி போடப்படாத டாட்டூவால் அவரது கண்களில் கருமை நிறம் பரவியதைக் கண்டு பிடித்தனர்.
View this post on InstagramA post shared by @ anoxi_cime on
மேலும் அலெக்சாண்ட்ராவின் இடது கண் பார்வையை முற்றிலும் இழந்து விட்ட அதிர்ச்சித் தகவலையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இனி அந்தக் கண்ணில் பார்வையை திரும்ப பெற முடியாது எனக் கூறியுள்ள அவர்கள், விரைவில் வலதுபக்க கண்ணிலும் பார்வையை இழக்க நேரிடும் எனவும் கூறியுள்ளனர்.
கண் போன்ற இடங்களில் டாட்டூ போட்டுக் கொள்ள விரும்புகிறவர்கள், அதற்கு முறையான பயிற்சி பெற்றவர்களை அணுகுவதே சரி. இல்லையென்றால் இது போன்று பார்வையையே இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications