வெடிக்கும் உலக போர்? ரஷ்யா உடன் போருக்கு தயாராகும் போலந்து! உற்று பார்க்கும் உலக நாடுகள்! பரபர
வார்சா: ரஷ்யாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக போலந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் சில பரபர தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சர்வதேச அளவில் மிகவும் பவர்புல்லான நாடுகளில் ஒன்று ரஷ்யா.. சோவியத் ஒன்றியமாக இருந்த போதும் சரி, ரஷ்யாவாகப் பிளவுபட்ட பிறகும் சரி, சர்வதேச அளவில் அதன் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது.

உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யா பல்வேறு நாடுகளுடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்துள்ளன. அதில் சீனா உள்ளிட்ட சில நாடுகளுடன் சுமூக போக்கு இருந்தாலும் கூட பல ஐரோப்பிய நாடுகளுடன் மோதல் போக்கே நிலவி வருகிறது.
உக்ரைன் போர்: இப்படிதான் ரஷ்யா உக்ரைன் மீதான போரை நடத்திக் கொண்டு இருக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த இந்த போர் ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்தப் போரில் தொடக்கத்தில் ரஷ்யாவின் ஆதிக்கம் இருப்பது போலத் தெரிந்தாலும், அதன் பிறகு ரஷ்யா பின்னடைவையே சந்தித்தது. இந்த போர் எங்கு அண்டை நாடுகளுக்கும் பரவுமோ என்ற அச்சம் பலருக்கும் தொடக்கம் முதலே இருந்தது.
இந்தச் சூழலில் தான் ரஷ்யா உடனான போர் தொடர்பாக போலந்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது. உக்ரைனைப் போலவே ரஷ்யாவின் முக்கியமான அண்டை நாடுகளில் ஒன்றாக போலந்து இருக்கிறது.. உக்ரைனைப் போல இல்லாமல் போலந்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ராணுவ கூட்டணியில் உறுப்பினராக உள்ளது.
போலந்து பாதுகாப்பு அமைச்சர்: இது தொடர்பாக போலந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனான போர் அச்சுறுத்தல் காரணமாகத் தனது நாடு போருக்கு அவசரமாகத் தயாராக வேண்டும் என்று கூறினார். போலந்து நாட்டின் தற்போதைய நிலையில், அங்குள்ள புவிசார் அரசியல் சூழல் குறித்து போலந்து பாதுகாப்பு அமைச்சர் அந்நாட்டு ஊடகத்திற்குப் பேட்டியளித்தார்.
அதில் உக்ரைன் உடனான போருக்குப் பிறகு ரஷ்யா போலந்து நாட்டின் மீது யுத்தத்தை ஆரம்பிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "எந்தவொரு சூழலும் ஏற்படலாம் என்றே நான் எதிர்பார்க்கிறேன். அதில் எது மோசமானதாக இருக்குமோ அது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். இந்தச் சூழலில் ஒரு ஒரு பாதுகாப்பு அமைச்சரின் பணியாக அதுவே இருக்கிறது. நான் சொல்வது என்ன என எனக்குத் தெரியும். நான் சும்மா இதைச் சொல்லவில்லை.. ஒவ்வொரு வார்த்தையும் கவனித்தே பேசியுள்ளேன்" என்றார்.
ஆயுதங்களைக் கணக்கிடும் பணி தொடக்கம்: போலந்தின் பாதுகாப்பு அமைச்சகம், ராணுவத்திற்கான ஆயுதங்கள் கையிருப்பு தேவை ஆகியவற்றை கணக்கிடத் தொடங்கி விட்டதாகவும். அச்சுறுத்தல்கள் எதாவது ஏற்பட்டால் அதற்கு எப்படி பதிலடி தர வேண்டும் என்பதில் உறுதியான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரிய அளவிலான ஆயுதக் கொள்முதல் மிகவும் முக்கியமானது என்றாலும், ஒவ்வொரு வீரருக்கும் தேவையான தனிப்பட்ட உபகரணங்களையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பில் போலந்து மிக முக்கிய பங்காற்ற விரும்புகிறது என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications