அமெரிக்கத் தெருவில் 'டுமீல் டுமீல்'.. 10 பேர் படுகாயம்.. யார் அந்த மூவர்?
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள போர்பான் தெருவில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டை 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் நடத்தியதாக தெரிகிறது. அவர்கள் யார் என்ற விசாரணையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

இவர்களை அடையாளம் தெரிந்தால் காவல்துறைக்குத் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் குறித்த பெயர், விவரங்களைப் போலீஸார் வெளியிடவில்லை. அனைவரும் சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் என்று மட்டும் போலீஸார் தெரிவித்துள்ளனர். சிலர் நியூ ஆர்லியன்ஸுக்கு சுற்றுலா வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 6 பேர் பெண்கள், நால்வர் ஆண்கள். அவர்களுக்கு 17 முதல் 39 வயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவரின் நிலைமை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது. நான்கு பேர் பரவாயில்லை, அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 5 பேர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பி விட்டனர்.
இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று பேரில் 2 பேர் இளைஞர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் தங்களுக்குள் சுட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பார் ஒன்றில் இந்த சண்டை நடந்து கடைசியில் தெருவில் வந்து சுட்டுக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
போர்பான் தெருவில் இந்த வார இறுதியில் எஸ்ஸ்ன்ஸ் என்ற கலாச்சார விழா நடைபெறவுள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கானோர் இங்கு கூடுவார்கள். தற்போது துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதால், இந்தத் தெருவின் பிரெஞ்சு குவார்ட்டர் பகுதியில் மட்டும் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications