டெக்சாஸ் தெருக்களில் பைக் ஓட்ட தடை: ஹார்லி ஷோரூம் மூடல்
வாக்கோ: டெக்சாஸில் பைக் ரேசிங் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். இதையடுத்து டெக்சாஸ் தெருக்களில் பைக் ஓட்டுவதற்கு போலீசார் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வாக்கோ நகரில் இருக்கும் ட்வின் பீக்ஸ் உணவகத்திற்கு வெளியே பைக் ரேசிங் குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர், 18 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் பைக் ரேசிங் குழுக்களைச் சேர்ந்த 170 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து டெக்சாஸ் தெருக்களில் பைக் ஓட்ட போலீசார் தடை விதித்துள்ளனர். யார் விதிகளை மதிப்பவர்கள், யார் விதிகளை மீறி நடப்பவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியாததால் டெக்சாஸில் பைக் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு அருகே உள்ள ஹார்லி டேவிட்சன் பைக் ஷோரூம் போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க மூடப்பட்டுள்ளது. ஷோரூமை எப்பொழுது திறந்தால் அது பாதுகாப்பாக இருக்கும் என்பது குறித்து போலீசாருடன் ஆலோசித்து வருவதாக ஹார்லி டேவிட்சன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட குழுக்களில் ஒன்றான பான்டிடோஸ் போதைப் பொருளை தயாரித்து விற்பனை செய்து வரும் சட்டவிரோத கும்பல் என்று அமெரிக்க நீதித் துறை தெரிவித்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications