தந்தையை இழந்த குழந்தைக்கு “ட்விங்கிள் டிவிங்கிள்” பாடிய ஹீரோ போலீஸ்!
டென்வர்: அமெரிக்காவில் சாலை விபத்தில் தந்தையைப் பறி கொடுத்த 2 வயது பெண் குழந்தைக்காக ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாட்டு பாடிய காவலரை பொதுமக்கள் பாசத்துடன் ஹீரோ என்று அழைத்து வருகின்றனர்.
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தால் ஒரு வாகனம் சாலையை விட்டு அருகிலுள்ள புல்வெளிக்குள் சீறிப் பாய்ந்தது.

விபத்துக்குள்ளான காருக்கு பின்பாக காரில் வந்து கொண்டிருந்த காவலர் ஒருவர், இந்த கொடூர காட்சியைப் பார்த்து பதறி, தனது காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு கார் கவிழ்ந்து கிடந்த புல்வெளியை நோக்கி வேகமாக ஓடினார்.
ஈர நெஞ்சத்தின் சாட்சி:
அங்கு அவர் பார்த்த காட்சி அப்படியே அவரை உறைய வைத்து விட்டது. விபத்துக்குள்ளான காருக்குள் வீறிட்டு அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்ட காவலர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பாவைப் பார்த்து அழுது கொண்டிருந்த குழந்தையை சாந்தப்படுத்துவதற்காக "ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்" என்று எல்லையற்ற அன்போடு இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் வீடியோ:
மனதை நெகிழச் செய்யும் இந்தக் காட்சியை தனது செல்போனில் படமெடுத்த ஒரு ஓட்டுனர் இதை தனது பேஸ்புக்கில் பதிவேற்ற அது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவ அந்தக் காவலரை அனைவரும் நாயகனாகக் கொண்டாடி வருகின்றனர்.
என் குழந்தை போன்ற உணர்வு:
இதுகுறித்து, அந்தக் காவலர் நிக் ஸ்ட்ரக் கூறுகையில், "அந்தக் குழந்தையை கையில் அள்ளிய நொடியில் அது என்னுடைய குழந்தை என்றுதான் நினைத்தேன். எனக்கும் 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவளது அழுகையை நிறுத்துவதற்காகப் பாடினேன்.
தந்தை பாசம் அவசியம்:
ஒவ்வொரு குழந்தைக்குமே தந்தை மிகவும் அவசியமனவர். எப்படியோ அந்த குழந்தைக்கு என்னால் முடிந்த உதவியை செய்ததற்காக சந்தோஷப்படுகிறேன். சாகும் வரை இந்த நாளை என்னால் மறக்க முடியாது." என்றார்.
மருத்துவமனையில் அனுமதி:
விபத்துக்குள்ளன காரில் கணவன், மனைவி மற்றும் அவர்களது 4 குழந்தைகள் பயணித்துள்ளனர். தந்தை சம்பவ இடத்திலேயே இறந்து விடவே தாயார் உட்பட மற்ற குழந்தைகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications