Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

25 ஆண்டுகளில் அமெரிக்க மக்களின் மனம் கவர்ந்த அதிபர் பில் கிளிண்டன்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்க மக்களின் மனம் கவர்ந்த அதிபர் பில் கிளிண்டன் தான் என்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல்/என்.பி.சி. நியூஸ்/அனென்பர்க் கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்க மக்களின் மனம் கவர்ந்த அதிபர் யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியது.

அந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளை பார்ப்போம்.

பில் கிளிண்டன்

பில் கிளிண்டன்

கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்க மக்களின் மனம் கவர்ந்த அதிபர் பில் கிளிண்டன் தான். அவருக்கு 42 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒபாமா

ஒபாமா

முதல் ஆப்பிரிக்க அமெரிக்க அதிபரான ஒபாமாவுக்கு இந்த கருத்துக்கணிப்பில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு 18 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

புஷ்

புஷ்

ஒபாமாவுக்கு அடுத்ததாக அதாவது மூன்றாவது இடத்தில் ஜார்ஜ் புஷ் உள்ளார். அவருக்கு 17 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர். அவரது தந்தை ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ புஷ் 16 சதவீதம் பேரின் ஆதரவுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

ஹிலாரி

ஹிலாரி

கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களிப்போம் என்று 55 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

கிளிண்டன்கள்

கிளிண்டன்கள்

தற்போதைய சூழலின்படி அமெரிக்காவில் அதிகம் பிரபலமான அரசியல் தலைவர்கள் என்றால் அது பில் கிளிண்டனும், அவரது மனைவி ஹிலாரியும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+