போப் பிரான்சிஸை சுற்றி சுற்றி வந்து கட்டிப்பிடித்த 'சுட்டி பையன்'

Subscribe to Oneindia Tamil

வாட்டிகன்: போப் பிரான்சிஸ் புனித பீட்டர் சதுக்கத்தில் உரை நிகழ்த்தியபோது சிறுவன் ஒருவன் அவரை சுற்றி சுற்றி வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளான்.

போப் பிரான்சிஸ் வாட்டிகனில் உள்ள புனித பூட்டர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்கள் முன்பு கடந்த சனிக்கிழமை இரவு உரை நிகழ்த்தினார். அவரது உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தபோதிலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் கவனம் வேறு இடத்தில் இருந்தது.

நிகழ்ச்சி மேடையில் சிறுவன் ஒருவன் வந்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தான்.

போப்

போப்

மேடையில் அமர்ந்திருந்த போப் அருகே வந்த சிறுவன் அவரது கழுத்தில் கிடந்த செயினை பிடித்து பார்த்தான்.

கட்டிப்புடி

கட்டிப்புடி

போப் மேடையில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது சிறுவன் அவரது கால்களை கட்டிக் கொண்டான். போப் பிரான்சிஸும் அவனை அன்போடு பார்த்து சிரித்துவிட்டு தனது உரையை தொடர்ந்தார்.

போக மாட்டேன்

போக மாட்டேன்

சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்தாலும் மேடையை விட்டு நகராமல் இருந்தான். போப் தன்னருகே வந்த சிறுவனின் தலையில் அன்புடன் கையை வைத்துக் கொண்டு உரை நிகழ்த்தினார்.

போஸ்

போஸ்

போப் பிரான்சிஸ் மேடையில் பேசுகையில் சிறுவன் அங்கும் இங்குமாக போவது, அவரை கட்டிபிடிப்பது, கைகளை உயர்த்துவது என்று செய்த செய்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+