விடைபெறுகிறார் போப் பிரான்சிஸ்.. இறுதி சடங்கு வரும் சனிக்கிழமை நடைபெறும் என வாடிகன் அறிவிப்பு!
வாடிகன்: கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். இதற்கிடையே போப் இறப்பிற்குப் பிறகு அவருடைய படங்களை வாடிகன் வெளியிட்டுள்ளது. மேலும், போப் பிரான்சிஸுக்கு வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 26) இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு முதல் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராகப் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். 88 வயதான இவருக்குக் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.

இருப்பினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தில் அவர் வீல் சாரில் வந்து மக்களை சந்தித்தார். அவரது உடல்நிலை சீராகி வந்ததாகவே பலரும் கருதினர். யாரும் எதிர்பாராத விதமாக மறுநாள், அதாவது நேற்று ஏப்ரல் 21ம் தேதி அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். வாடிகன் நகரில் இருந்த போப் பிரான்சிஸ் நேற்று காலை காலமானதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இறப்பிற்குப் பிறகு போப் பிரான்சிஸின் படங்களை வாடிகன் வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடலை வாடிகன் வெளியுறவுச் செயலாளர் ஜெபிப்பதைப் போன்ற வீடியோவை வாடிகன் வெளியிட்டுள்ளது. சிவப்பு அங்கிகளுடன், பிஷப்ப் ஆடை போப் பிரான்சிஸுக்கு அணிவிக்கப்பட்டு, அவர் வசித்த சாண்டா மார்டா இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது அதில் தெரிகிறது.
மேலும், போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பொதுவாக போப் இறந்தால் 4 முதல் 6 நாட்களில் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும். இதற்கிடையே போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 26ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று வாடிகன் அறிவித்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications