போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் - வாடிகன் நிர்வாகம் தகவல்
ரோம்: நிமோனியா பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக போப்பாண்டவர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக வாடிகன் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள 130 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தலைவராக இருப்பவர் போப்பாண்டவர் என்று அழைக்கப்படும் போப் பிரான்சிஸ். இவர் இத்தாலியின் தலைநகரான ரோமில் வசித்து வருகிறார்.

போப் பதவி கி.பி 1 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. செயின்ட் பீட்டர் என்பவர்தான் முதல் போப்பாண்டவர். தற்போது போப் பதவியில் 266வது போப், போப் பிரான்சிஸ் ஆவார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பதவி ஏற்றுக்கொண்டார்.
போப் பிரான்சிஸ் சிறு வயது முதலே நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால், இவரது நுரையீரலில் உள்ள ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
மூச்சுக் குழாயில் அழற்சி, சிறுநீரகப் பிரச்சனை இருப்பதும் சமீபத்தில் தெரியவந்துள்ளது. இரண்டு நுரையீரலும் நிமோனியா பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர் ரோம் நகரில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அந்த மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் கூறியது கிறிஸ்தவ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவர் சுவாசித்து வந்த நிலையில், போப்பின் உடல் நிலையில் தொடர் முன்னேற்றம் காணப்படுவதாக வாட்டிகன் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: போப் பிரான்சிஸ் உடல்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுநீரகப் பிரச்னை மற்றும் நுரையீரலில் காணப்பட்ட வீக்கமும் சரியாகி வருகிறது.
போப்புக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனைகள் மூலம் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை அறையில் வழக்கமான பணிகளை போப் மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications