போப் பிரான்சிஸ் உடல்நிலையில் சற்று முன்னேற்றம்.. வாட்டிகன் வெளியிட்ட முக்கிய ஹெல்த் அப்டேட்!
ரோம்: நிமோனியா பாதிப்பால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக வாட்டிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் (88) அண்மைக் காலமாகவே வயோதிகம் காரணமாக உடல்நலப் பிரச்சனைகளால் அவதியுற்று வருகிறார். சிறு வயதிலேயே போப் பிரான்சிஸுக்கு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்ட நிலையில், நாள்பட்ட நுரையீரல் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக குளிர்காலத்தில் அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் மூச்சுக்குழாய் அழற்சி மோசமடைந்ததை அடுத்து போப் ஆண்டவர் கடந்த 14 ஆம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மருத்துவர்களின் அதிதீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். போப் ஆண்டவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார் போப் பிரான்சிஸ்.
போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து நேற்று வாட்டிகன் நிர்வாகம் வெளியிட்ட தகவலில், போப் பிரான்சிஸ் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது. எனவே, போப் ஆபத்திலிருந்து இன்னும் மீளவில்லை. காலையில், போப் பிரான்சிஸ் ஆஸ்துமா போன்ற நீடித்த தீவிர சுவாச நெருக்கடியை அனுபவித்தார். இதன் காரணமாக அதிக ஆக்சிஜன் தேவைப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாட்டிகன் நிர்வாகம், போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்பாக புதிய அப்டேட்டை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் போப் பிரான்சிஸ் உடல்நிலையில், சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று போப் பிரான்சிஸுக்கு ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் சில ஆய்வக சோதனைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது லேசான சிறுநீரகப் பிரச்சனையின் தீவிரம் குறைந்துள்ளது. ஆக்ஸிஜன் செலுத்தப்படுவது தொடர்கிறது, இருப்பினும் ஆக்ஸிஜன் செலுத்தப்பட வேண்டிய அளவுகள் சற்றுக் குறைந்துள்ளன." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications