Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிம்பிள்! தங்க சிலுவை முதல் வாடிகன் அரண்மனை வரை! மறுத்த போப்! பாதி நுரையீரலில் சுவாசித்த பிரான்சிஸ்

Subscribe to Oneindia Tamil

வாடிகன்: உடல்நல பாதிப்புகளால் காலமான போப் பிரான்சிஸ், எளிமையின் சிகரம் என அ ழைக்கப்படுகிறார். தங்க சிலுவை, சிவப்பு காலணிகளை அணிய மறுத்துவிட்டார். வாடிகன் அரண்மனையில் தங்குவதையும் அவர் விரும்பவில்லையாம். போப் பிரான்சிஸ் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

pope

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர் பிரான்சிஸ், இவர் 1936 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 5 குழந்தைகளில் ஒருவராக பிறந்தார். இவருக்கு ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியா என்ற பெயரிடப்பட்டது. சிறு வயதிலேயே இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளை கற்றுத் தேர்ந்தார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தவர் போப் பிரான்சிஸ் (88). இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நுரையீரல் பாதிப்பு

அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சுவாசக் குழாயில் அடைப்பு இருந்தது. மருத்துவமனையில் கடந்த 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறினார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

வாடிகனில் இறந்த போப்

இந்த நிலையில் நேற்றைய தினம் வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது இறப்புக்கு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன. அது போல் அவரது இறுதி சடங்கில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சா.மு.நாசர், இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

போப் பிரான்சிஸ் எளிமை

போப் பிரான்சிஸ் எப்போதும் எளிமையாக இருப்பார். அவர் குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பார்க்கலாம். அவர் தென் அமெரிக்காவில் இருந்து வந்த முதல் போப் ஆவார். ஜேசுட் வரிசையில் இருந்து வந்த முதல் போப் மற்றும் பிரான்சிஸ் என்ற பெயரைப் பெற்ற முதல் நபர் ஆவார்,

தங்க சிலுவை

இவர் எளிமையானவர். இவர் எர்மைன் ஒட்டப்பட்ட சிவப்பு வெல்வெட் மொசெட்டா, தங்க மார்பக சிலுவை, சிவப்பு காலணிகளை பயன்படுத்த மறுத்துவிட்டார். அவர் வெள்ளி சிலுவையையும் கருப்பு காலணிகளையும் அணிந்திருந்தார்.

போப்

அது போல் போப்புகளுக்கு வாடிகன் அரண்மனையில் தங்க இடம் அளிக்கப்படும். ஆனால் அங்கு தங்க இவர் மறுத்துவிட்டு டோமஸ் காசா மார்ட்டாவில் தங்கியிருந்தார். இவர் பவுன்சராக இருந்தவர். போப்பிற்கு குழந்தை பருவம் முதலே சுவாச தொற்று இருந்து வந்ததாம்.

நுரையீரலில் பாதி

இதனால் அவர் நுரையீரலின் பாதியை இழந்தார். அவருக்கு ஒரே ஒரு நுரையீரல் மட்டுமே இயங்கியது. பெண்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து அவர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். நிர்வாக பதவிகளுக்கு பெண்களை நியமித்தார். குழந்தைகள் மீது அன்பு கொண்டவர்.

சிறிய வீட்டில் வசித்தவர்

இவர் பியூனஸ் அயர்சின் பேராயராக இருந்த போது அதிகாரப்பூர்வமான இல்லத்தில் வசிக்காமல் புறநகரில் ஒரு சிறிய வீட்டில் வசித்தார். அது போல் பேராயருக்கான வாகனங்களையும் பயன்படுத்தவே மாட்டார். சாதாரண மக்களுடன் பேருந்து, ரயில்களில் பயணம் செய்தார். ரோமில் இருந்து செல்ல வேண்டியிருந்த போது கூட விமானத்தில் எகானமி வகுப்பில்தான் பயணித்திருக்கிறார்.

பதவியேற்பு

அவர் பேராயராக இருந்த போதுதான் 2013 ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ்ஸாக பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான அர்ஜென்டினா நாட்டு மக்கள் ரோமிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.

அன்பு காட்டியவர்

இதையறிந்த போப் பிரான்சிஸ் , அதிக செலவு செய்து ரோமிற்கு வருவதை விரும்பவில்லை. மாறாக விமான டிக்கெட்டுகளுக்கு செலவழிக்கும் தொகையை ஏழை மக்களுக்கு கொடுத்துவிடுங்கள் என்றார். போப் பிரான்சிஸான போதும் அவரிடம் இருந்த எளிமை மாறவில்லை. அனைவரிடமும் அன்பு காட்டி வந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+