“ஆயுதங்களால் லாபம் பார்க்கும் கொடுங்கோலர்கள்..” டிரம்பை மறைமுகமாக திட்டிய போப்! ஷாக்
யாவுண்டே: கேமரூன் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை லியோ, போர் மற்றும் உலகத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து வெளியிட்டுள்ள மிகக் கடுமையான விமர்சனங்கள் உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக டிரம்ப் தரப்பு இவரை பேச்சை கேட்டு ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறது.
போர்களுக்காகப் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிடும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியுள்ளார். உலகம் ஒரு சில சர்வாதிகாரிகளால் சீரழிக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். அழிப்பதற்குக் குறைந்த காலமே போதும், ஆனால் கட்டியெழுப்ப ஒரு வாழ்நாள் போதாது என்பதைப் போரை முன்னெடுப்பவர்கள் உணர வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் போப் லியோ ஆகியோருக்கு இடையே ஏற்கெனவே பஞ்சாயத்துகள் இருந்த நிலையில், தற்போது போப் லியோவின் பேச்சு, டிரம்ப் தரப்புக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான ராணுவ நடவடிக்கைகளை போப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் விடுத்த ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் என்ற எச்சரிக்கைக்கு போப் தனது கவலையைத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, "லியோ ஒரு போப் ஆக தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்" என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டிருந்தார். மட்டுமல்லாது, அவர் அமெரிக்கர் என்பதால்தான் போப் பதவிக்கு தெர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் டிரம்ப் விமர்சித்திருந்தார்.
கடந்த ஆண்டு போப் பதவியேற்ற லியோ, அமெரிக்காவில் பிறந்த முதல் போப் ஆவார். இவர் ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளையும் விமர்சித்துள்ளார்.
தற்போது காமரூனில் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பமெண்டா நகருக்குச் சென்ற அவர், அங்குள்ள கத்தோலிக்கக் கதீட்ரலில் பேசினார். ஆப்பிரிக்க நிலத்தின் வளங்களைச் சுரண்டுபவர்கள், அதில் கிடைக்கும் லாபத்தை ஆயுதங்களில் முதலீடு செய்வதால், மரணமும் சீர்குலைவும் தொடர்கதையாகி வருவதாகக் குற்றம் சாட்டினார். தங்களின் சுய லாபத்திற்காக கடவுளின் பெயரையே சிதைப்பவர்களை அவர் கடுமையாகச் சாடினார்.
போப்பின் இந்த ஆப்பிரிக்கப் பயணம், அந்தப் பிராந்தியத்தில் கத்தோலிக்க மதத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. 2024-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, உலகில் உள்ள கத்தோலிக்கர்களில் 5ல் ஒரு பகுதியினர் (சுமார் 28.8 கோடி பேர்) ஆப்பிரிக்காவில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications