யாருமே இப்படி செய்ததில்லை..சின்ன வெள்ளை காரில் போப் ஆண்டவர் செய்த சம்பவம்..வெலவெலத்த ரஷ்ய அதிகாரிகள்
வாடிகன் : உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு வாடிகனில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு நேரில் சென்ற போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கிருந்த அதிகாரிகளிடம் வலியுறுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து ரஷ்யா வியாழன் அன்று உக்ரைன் மீது தரை, வான் மற்றும் கடல் என மும்முனைகளில் தனது படையெடுப்பைத் தொடங்கியது.
உக்ரைன் மீதான3ம் நாள் போரை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய ராணுவத்தினர்.

உக்ரைன் ராணுவம்
பேச்சுவார்த்தைக்கு தயார் என ஒரு புறம் கூறினாலும் மற்றொருபுறம் உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்ய ராணுவம். மூன்றாவது நாள் போர் வரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் போர் தொடர்ந்து வருகிறது. மேலும் ரஷ்யாவுக்கும் உக்ரைன் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக நிலைமை அங்கு மேலும் தீவிரமாகி வருகிறது.

உலக நாடுகள் உதவி
மணிக்கு மணி பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கானோர் அங்கு கொல்லப்பட்டு வருகின்றனர். போர் விதிமுறைகளை மீறி ரஷ்யா குடியிருப்பு பகுதிகளிலும், மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வரும் நிலையில், உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். உக்ரைனுக்கு ஆதரவாக ஸ்வீடன் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போரை நிறுத்த கோரிக்கை
இந்நிலையில் உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரிக்கை வலுத்து வரும் நிலையில், போப் ஆண்டவர் போரை நிறுத்த எடுத்துள்ள நடவடிக்கை பலரையும் நெகிழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் ரோமில் உள்ள ரஷிய தூதரகத்துக்கு திடீரென்று நேரில் சென்றார். அப்போது அங்கிருந்த தூதரக அதிகாரிகளை சந்தித்து உக்ரைன் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் குறித்த தனது கவலையை தெரிவித்ததாகவும், போரை உடனே நிறுத்துமாறு அவர் தூதரக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

போப் பிரான்ஸிஸ்
ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், ரஷிய தூதரகத்துக்கு போப் ஆண்டவர் நேரில் சென்றதை வாடிகன் அதிகாரிகள் உறுதி செய்தனர். போப் ஆண்டவர் சிறிய வெள்ளை காரில் ரஷிய தூதரகத்துக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து பேசினார் என்று வாடிகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த போப் ஆண்டவர் மேற்கொண்ட முயற்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications