முதல் முறையாக அமெரிக்காவுக்கு 'விசிட்' அடிக்கும் போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ்
வாஷிங்டன்: தனது வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார் போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ். அமெரிக்காவுக்கு போவதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருந்தவர் போப்பாண்டவர். ஆனால் தற்போது தனது கொள்கையை ஓரம் கட்டி வைத்து விட்டு அமெரிக்காவுக்கு வருகிறார்.
இதுவரை இருந்த போப்பாண்டவர்களிலேயே மிகவும் வித்தியாசமானவர் 78 வயதான போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ். அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். அமெரிக்கா இவரை இதுவரை ஈர்த்ததில்லை. முதலாளித்துவத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டவர் என்பதும் அதற்கு இன்னொரு காரணம்.

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக போப்பாண்டவர் அமெரிக்காவுக்கு வருகிறார். வாஷிங்டன், நியூயார்க், பிலெடல்பியா ஆகிய நகரங்களுக்கு செல்கிறார்.
செப்டம்பர் 22ம் தேதி பிற்பகல் வாஷிங்டன் வந்து சேருகிறார் போப்பாண்டவர். ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்திற்கு அவரது விமானம் வந்து சேருகிறது. அன்று இரவு வாஷிங்டனில் தங்குகிறார் போப்பாண்டவர். அவர் எங்கு தங்குகிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
2 நாள் பயணமாக வரும் போப்பாண்டவர் அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிஷல் ஆகியோரைச் சந்திக்கிறார். பிஷப்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோரையும் சந்திக்கிறார்.
வாஷிங்டன் பயணத்திற்குப் பின்னர் நியூயார்க் செல்கிறார். அதன் பின்னர் பிலடெல்பியா செல்கிறார்.
பிரான்சிஸின் முதல் பயணம் இது என்பதால் அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதை விட அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே சமரசம் ஏற்பட தீவிர முயற்சி எடுத்தவர் என்பதும் அமெரிக்கர்களிடையே போப்பாண்டவரின் வருகை குறித்த பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications