4 பெண்கள், முஸ்லீம் பெரியவர் உட்பட 12 பேரின் காலைக் கழுவி முத்தமிட்ட போப் ஆண்டவர்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை கிறிஸ்துவர்கள் புனித வெள்ளி என்று கூறுகின்றனர். சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவு இயேசு கிறிஸ்து தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்தார். பின்பு அவர்களின் கால்களைக் கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார்.
தலைவராக இருந்தாலும் தொண்டர்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு அன்பு கட்டளையிட்டதன் பேரில், புனித வெள்ளிக்கு முதல் நாளான வியாழக்கிழமை அன்று புனித வியாழன் என்கிற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் வாடிகனில் நடைபெற்ற புனித வியாழன் வழிபாட்டு நிகழ்ச்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், பாதிரியார்களும் கலந்து கொண்டனர். அப்போது போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசுகையில்,
பாதிரியார்கள் மிக எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும். கிறிஸ்தவ தேவாலயங்களின் கதவுகள் திறந்து கிடக்கும் வீடாக, பாவப்பட்டவர்களின் முகாம் ஆக தெருக்களில் வாழ்பவர்களின் இல்லமாக, நோயாளிகளின் அன்பு நிலையமாக இளைஞர்களின் முகாம் ஆக திகழ வேண்டும் என்றார்.
பின்பு போப் ரோம் புறநகரில் கிறிஸ்தவ தேவாயலம் நடத்தும் மறுவாழ்வு மையத்தில் தங்கியுள்ள 12 உடல் ஊனமுற்றோரின் கால்களை கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார். இதில் 16 முதல் 86 வயதுவரை உள்ளவர்கள் அடங்குவர். அவர்களில் நான்கு பெண்கள், ஹமீது (75) என்ற லிபியாவைச் சேர்ந்த முஸ்லீம் பெரியவரும் அடக்கம்.
இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சி வாடிகன் அல்லது ரோமில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications