போப் ஆண்டவருக்கு மூளையில் கட்டியா?
வாடிகன்: போப் ஆண்டவருக்கு மூளையில் கட்டியிருப்பதாக இத்தாலிய செய்தித்தாளில் வெளியான செய்தியை வாடிகன் மறுத்துள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த நாளிதழான கோடிடியானோ நாசியோனேலில் புதன்கிழமை போப் ஆண்டவர் பிரான்சிஸ் பற்றி செய்தி வெளியானது. அந்த நாளிதழில் கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் ஒருவர் பைசாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இருந்து வாடிகனுக்கு வரவழைக்கப்பட்டார். அவர் போப் ஆண்டவரை பரிசோதனை செய்துவிட்டு அவருக்கு மூளையில் சிறிய கட்டி இருப்பதாகவும் அதை அறுவை சிகிச்சை செய்யாமலேயே கரைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் பைசா நகர் அருகே உள்ள சான் ரோசோர் டி பார்பாரிசினா மருத்துவமனை ஆலோசகரான டாக்டர் டகனோரி புகுஷிமா தான் அந்த மருத்துவர் ஆவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் போப் ஆண்டவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததே இல்லை. இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று டாக்டர் புகுஷிமா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் பெடரிகோ லம்பார்டி கூறுகையில், நான் போப் ஆண்டவரை சந்தித்து பேசினேன். அவர் உடல் நலத்திற்கு ஒன்றும் இல்லை. அவர் நலமாக உள்ளார். அந்த நாளிதழில் வந்த செய்தி மன்னிக்க முடியாதது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications