உக்ரைன் மீது போர்.. ஆபாச வீடியோக்களை பார்க்க ரஷ்யாவுக்கு தடை விதித்த நிறுவனங்கள்

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும்நிலையில் ரஷ்யா நாட்டில் உள்ள பயனாளிகள் ஆபாச வலைதளங்களை பார்க்க முடியாத அளவிற்கு இணையதள நிறுவனங்கள் தடை விதித்துள்ளது.

Recommended Video

    Russia - China-வின் அடுத்த டார்கெட் இந்த நாடுதான்.. எச்சரிக்கும் Grandmaster Garry Kasparov

    கடந்த வியாழக்கிழமை முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இன்றைய தினம் 3ஆவது நாளாக நடைபெறும் இந்த போரால் உக்ரைன் மக்களும் படிப்பதற்காகவும் பணிநிமித்தமாகவும் உக்ரைன் சென்றுள்ள பிற நாட்டினரும் அச்சத்தில் உள்ளனர்.

    போரை நிறுத்துமாறு உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்தும் போரை நிறுத்தாத ரஷ்யா ஆக்ரோஷமாக போரிட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிகளையும் தாக்கி வருகிறது. இதனால் ஏற்கெனவே 7 அப்பாவி மக்கள் மரணமடைந்துள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர்.

    பொருளாதார தடை

    பொருளாதார தடை

    போரை நிறுத்தாவிட்டால் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அது போல் ஜி 7 கூட்டமைப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. பல்வேறு கடுமையான பொருளாதார தடை விதித்த போதிலும் ரஷ்யா தனது முடிவிலிருந்து பின் வாங்கவில்லை.

    பொருளாதார தடைகள் விதிப்பு

    பொருளாதார தடைகள் விதிப்பு

    இந்த நிலையில் பொருளாதார தடைகளை விதித்த நாடுகளுக்கு சொந்தமாக ரஷ்யாவில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் கூறுகையில் வெளிநாடுகளில் உள்ள ரஷ்ய குடிமக்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய பரிசீலனை செய்யப்படும். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.

    ரஷ்யா படையெடுப்பு

    ரஷ்யா படையெடுப்பு

    உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம், ரஷ்ய அரசு ஊடகங்கள் உலகில் எங்கும் பேஸ்புக் தளத்தில் விளம்பரங்கள் செய்யவும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கும் தடை விதித்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஆபாச படங்கள் பார்க்க தடை

    ஆபாச படங்கள் பார்க்க தடை

    இந்த நிலையில் ஆபாச படங்களை வெளியிடும் நிறுவனங்களும் ரஷ்யா பயனாளிகள் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போரிடுவதை கண்டித்து ஆபாச வலைதள நிறுவனங்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து அவர்கள் ஆபாச வீடியோக்களை பார்க்காத வண்ணம் பிளாக் செய்துள்ளார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+