தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு! வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
Subscribe to Oneindia Tamil
தைபே: தைவானில் இன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தைவானின் வடகிழக்கு நகரமான யிலானில், ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7 ஆக பதிவாகியிருக்கிறது. தைவானின் தலைநகரான தைபேயிலும் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது
நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் 7 என்பது, மிகவும் ஆபத்தான நிலநடுக்கமாகும். இது உயிரிழப்புகளையும் பலத்த சேதத்தையும் ஏற்படுத்தும். எனவே தைவான் நிலைமை குறித்து சர்வதேச அளவில் அச்சம் எழுந்திருக்கிறது.













Click it and Unblock the Notifications