இந்தோனேஷியாவின் ரியோ ஜெயபுராவில் பயங்கர நிலநடுக்கம்- ரிக்டரில் 7.0 அலகுகளாக பதிவு!
ரியன் ஜெயபுரா: இந்தோனேஷியாவில் பப்புவாவிற்கு அருகில் ரியன் ஜெயபுரா கடலோர பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு நேரப்படி அதிகாலை 6.41 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஜெயபுராவிலிருந்து 250 கிலோ மீட்டர் மேற்காக ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. எனினும், அதிர்வுகளின் தாக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
"கிட்டதட்ட 4 நிமிடங்களுக்கு கடுமையான அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பிடங்களை விட்டு வெளியில் ஓடி வந்தனர்" என்று பேரிடர் மைய பிரதிநிதி சுடோபோ புர்வோ நுங்கரகோ தெரிவித்துள்ளார்.
"சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த முதல்நிலைத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேஷியாவின் ஆளரவமற்ற வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளதால் தகவல்களைப் பெற தாமதமாகின்றது. கீழடுக்கு பாறைகளின் நகர்வு மிகவும் அதிகமாக இருந்து வருவதே இதற்கான முக்கிய காரணம்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தோனேஷிய அதிகாரிகளோ, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமோ இந்நிலநடுக்கம் காட்டுப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காரணத்தினால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications