நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி பேரலைகள் தாக்கின!
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி பேரலைகள் நியூசிலாந்தை தாக்கின.
Subscribe to Oneindia Tamil
கிறிஸ்ட் சர்ச்: நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில்இ ன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து சுனாமி பேரலைகள் நியூசிலாந்தை தாக்கின.

நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் பகுதி நிலநடுக்கத்தாலடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கமானது 185 பேரை பலி கொண்டது. அது ரிக்டரில் 6.3 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது.
அப்போது 11 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் தாக்கின. இந்த நிலையில் இன்றும் கிறிஸ்ட் சர்ச் பகுதியில் ரிக்டரில் 7.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Caught that first big tremor on camera! 😳 #eqnz pic.twitter.com/u0lwisYrIL
— James Mclaren (@jamesmclaren94) November 13, 2016
நிலநடுக்கம் ஏற்பட்ட 2 மணிநேரத்துக்கு பின்னர் 6 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் தாக்கின. நியூசிலாந்து அரசும் அவசர நிலையை பிரகடனம் செய்தது.












Click it and Unblock the Notifications