அட பக்கி.... பலூனுக்குள் நுழைந்து சாகசம் செய்யப் போய் மாட்டிக் கொண்ட நபர்!
நியூயார்க்: நியூயார்க்கில் ஆளுயர தண்ணீர் பலூனில் நுழைந்த நபர் அதில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய அதிர்ச்சியளிக்கும் வீடியோ யூடியூபில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
யூடியூபில் கேலி, கிண்டல் செய்யும் வீடியோக்களை வெளியிடும் ஜாக் டென்னி என்பவர் பலூனுக்குள் இறங்கி ஒரு ரிஸ்க்கான சாகசம் செய்ய முற்பட்டபோது, துரதிர்ஷ்டவசமாக அதில் சிக்கிக்கொண்டார். புத்திசாலித்தனமாக செயல்பட்ட நண்பர்களால் மயிரிழையில் அவர் உயிர் தப்பினார்.

ஜாக் டென்னி சர்பிங் செய்யும் வீடியோக்களை வெளியிடும் ஒரு குறும்புக்கார நெட்டிசன். அவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் படகு ஒன்றை வைத்து, அதற்குள் பெரிய பலூன் ஒன்றில் தண்ணீர் நிரப்பிக்கொண்டே அதன் உள்ளே நுழைந்தார். படகின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தவர் முழுமையாக பலூனுக்குள் நுழைந்த வேளையில் படகு திடீரென மூழ்க ஆரம்பித்ததும் அதிர்ச்சியடைந்தார்.
இச்சம்பவத்தை வீடியோ பதிவு செய்துகொண்டிருந்த நண்பர்களில் சிலர் சூழ்நிலை புரிந்தவுடன் உடனடியாக ஸ்க்ரூ டிரைவருடன் தண்ணீரில் குதித்து பலூனை உடைத்து ஜாக்கை காப்பாற்றினர். அதிர்ச்சி தரும் இந்த வீடியோ தற்போது யூடியூபின் வைரலாக பரவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications