திருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்
பிரேசிலியா: பிரேசிலில் திருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னால் பிரீகிளாம்சியா நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சா பாலோவை சேர்ந்தவர் ஜெஸ்ஸிகா கியூடெஸ் (30) செவிலியர்.. 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் தனது காதலனை திருமணம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தேவாலயத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பிரீகிலாம்ஸியாவால் பாதிக்கப்பட்ட அவர் திடீரென பின் கழுத்து வலி ஏற்பட்டது. உடனே வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனிடையே கியூடெக்ஸை திருமணம் செய்யவிருந்த தீயணைப்பு துறை வீரர் ஃபிலேவியோ கான்கல்வெஸ் வர தாமதமானதை எண்ணி கவலைப்பட்டார்.

மூளையில் ரத்தக் கசிவு
பின்னர் கார் வந்ததும் நடந்ததை அறிந்து அதிர்ந்தார். மயங்கிக் கிடந்த ஜெஸ்ஸிகாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அப்போது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது.

ஐசியூ
வயிற்றில் இருந்த பெண் குழந்தை அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்து மீட்கப்பட்டது. 6 மாத குழந்தை என்பதால் பச்சிளம் குழந்தைகளை வைத்து பராமரிக்கும் ஐசியூவில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.

சோகம்
கியூடெக்ஸின் இறப்பால் காதலன் உள்பட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வரை நன்றாக ஆரோக்கியமாக இருந்த கியூடெக்ஸ் தற்போது தனது குழந்தையை கூட பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரீகிளாம்சியா
பிரீகிளாம்சியா நோயானது கர்ப்பிணிகளுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கும் வரும். இது குறித்த அறிகுறிகள் ஏதும் அவர்களுக்கு தெரிவதில்லை. உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு பின்னர் கணிசமான அளவு புரதங்கள் சிறுநீர் மூலம் வெளியேறும். இதனால் கல்லீரல், சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications