கணவரின் கள்ளக்காதலி மீது மலத்தைக் கொட்டி 'கமகம' அர்ச்சனை செய்த மனைவி!

Subscribe to Oneindia Tamil

ஜோகன்ஸ்பெர்க்: பிறக்கப் போகும் குழந்தைக்கான உடைகளைக் கேட்டு கணவரின் கள்ளக்காதலி மீது மனைவி ஒரு வாளி மனிதக் கழிவை ஊற்றிய சம்பவம் தென்னாப்பிரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னெஸ்பர்க் நகரின் மேற்கே ஹனிடியூ பகுதியை சேர்ந்தவர் லேக்டன் எம்வன்ஜி (36). இவரது மனைவி மெமரி எம்வன்ஜி (29) தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில், கடந்த மூன்றாண்டுகளாக லேக்டனுக்கு ஏஞ்சலினா (40) என்ற மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஏஞ்சலினாவும் ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார்.

சமீபத்தில் ஏஞ்சலினாவுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கென லேக்டன் சில ஆடைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். இது குறித்து கேள்விப்பட்ட மெமரி ஆத்திரமடைந்துள்ளார். எனவே, ஏஞ்சலீனா அவமானப் படுத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்காக தனது மலத்தை இரண்டு தினங்களாக வாளி ஒன்றில் சேகரித்துள்ளார். அந்த மலம் நிரம்பிய வாளியைக் கையில் ஏந்தியபடி ஏஞ்சலினா வீட்டிற்கு சென்றுள்ளார் மெமரி.

அங்கு தனது சிறிய வீட்டில் ஏஞ்சலினா சமைத்து கொண்டு இருந்திருக்கிறார். வீட்டு வாசலில் வாளியுடன் வந்து நின்ற மெமரியைப் பார்த்து அச்சமடைந்துள்ளார் ஏஞ்சலினா. தனது கணவர் வாங்கித் தந்த குழந்தையின் உடைகளைக் கேட்டுள்ளார் மெமரி. ஆனால், அதனைத் தர ஏஞ்சலினா மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மெமரி தனது கையிலிருந்த வாளியிலிருந்த மலத்தை ஏஞ்சலினா மீதும், அவரது படுக்கை மீதும் கொட்டியுள்ளார். தனது வேலை முடிந்ததும் அவர் அங்கிருந்து வெளியேறி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஏஞ்சலினா கூறுகையில், ‘லேக்டன் தனது முதல் திருமணம் மகிழ்ச்சியற்றதாக இருக்கிறது என என்னிடம் கூறினார். எனவே தான், என்னை விட 4 வயது குறைந்திருந்த அவருடன் நான் தொடர்பு ஏற்படுத்தி கொண்டேன். எங்களுக்கு இடையேயான தொடர்பு கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், லேக்டனின் மனைவி செய்தியாளர்களிடம் கூறும்போது, அவள் (ஏஞ்சலினா) எனக்கு அதிக வலியை தந்திருக்கிறாள். எனவே, பதிலுக்கு அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நான் விரும்பினேன். அதனால் தான் வாளியில் மனித கழிவுகளை நிரப்பி அதனை அவள் மீது ஊற்றி என் பழியை தீர்த்து கொண்டேன்' என்றார்.

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு காரணமான லேக்டனை செய்தியாளர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால், அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+