போருக்கு ரெடியாகுங்க! இஸ்ரேல் நடத்திய சர்ப்ரைஸ் அட்டாக்கிற்கு.. பதிலடி தரப்போகும் ஈரான்? போச்சு
டெஹ்ரான்: இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாம்.
ஈரான் மீது இஸ்ரேல் மூன்று துல்லியமான தாக்குதல்களை நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.

குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேல் வெளியிட்ட ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ராணுவ தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க அணு மற்றும் எண்ணெய் மையங்களை தவிர்த்து இஸ்ரேல் ஜாக்கிரதையாக தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த தாக்குதல் தற்போது நிறைவு பெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தங்களின் தாக்குதல் வெற்றிபெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் மூன்று அலை தாக்குதல்களை நடத்தி உள்ளது. மொத்தமாக 20 இலக்குகளை குண்டுவீசி தாக்கியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்கு மற்றும் தென்மேற்கில் உள்ள பல ராணுவ தளங்கள் தாக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
ஈரான் பதிலடி: இப்படி இஸ்ரேல் தாக்கிய நிலையில் அதற்கு ஈரான் மீண்டும் பதிலடி கொடுக்க முடிவு செய்து உள்ளதாம். அதன்படி ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாம்.
இஸ்ரேல் என்ன மாதிரியான தாக்குதல் நடத்துகிறது என்பதை பொறுத்து ஈரானின் பதிலடி மாறும் என்கிறார்கள். ஈரானின் ராணுவ தளவாடங்களை மட்டும் இஸ்ரேல் தாக்கினால் ஈரான் பதிலடி தரும்.. ஆனால் அந்த பதிலடி பெரிதாக இருக்காது. ஆனால் ஈரானின் மக்கள் இருக்கும் இடம், அணு உலைகளை இஸ்ரேல் குறி வைத்தால் ஈரான் கடுமையான பதிலடியை கொடுக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் எப்படி பதிலடி தரும்.. அந்த பதிலடி எந்த அளவிற்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.
முக்கியமாக இஸ்ரேலுக்கு சொந்தமான F-35 'Adir’ ஸ்டெல்த் ஃபைட்டர்கள்.. தோராயமாக 2,000 கிலோமீட்டர்கள் பயணம் செய்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதற்கு கண்டிப்பாக ஈரான் பதிலடி நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு!











Click it and Unblock the Notifications