நான்சென்சா பேசாதீங்க... செய்தியாளரை திட்டி நிதானம் இழந்த அமெரிக்க அதிபர் ஒபாமா...
வாஷிங்டன் : அமெரிக்காவின் முக்கிய செய்தி நிறுவனத்தின் செய்தியாளரை முட்டாள்தனமாக பேசாதீர்கள் என்று ஒபாமா திட்டியது அங்கிருந்த மற்ற செய்தியாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
அறிவுப்பூர்வமாகவும், நகைச்சுவை நிரம்பிய பேச்சுக்கும் பெயர் பெற்றவர் அமெரிக்க அதிபர் ஒபாமா. ஆனால் ஈரான் நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.

பிரபலமான சி.பி.எஸ். நிறுவனத்தின் செய்தியாளரான மேஜர் காரெட், ஈரானுடனான பேச்சுவார்த்தையின் போது அந்த நாட்டு சிறையில் வாடும் 4 அமெரிக்கர்கள் விடுதலை தொடர்பாக ஏன் பேச்சு நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஒபாமா, முட்டாள்தனமாக பேசாதீர்கள். இதுபோன்ற விஷயங்கள் பற்றி நீங்கள் இன்னும் நன்றாக தெரிந்துக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தையின் போது 4 அமெரிக்கர்கள் விடுதலைப்பற்றி பேசினால், அவர்கள் அதை ஒரு கேடயமாக பயன்படுத்தி பல சலுகைகளை கேட்பார்கள். அதை தவிர்க்கும் பொருட்டே அந்த விஷயத்தை நாங்கள் எழுப்பவில்லை. ஆனால், அங்கு சிறையில் வாடும் 4 பேரையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறினார்.
நீண்டகாலமாக வெள்ளை மாளிகை செய்தியாளராக பணியாற்றி வரும் காரெட்டை, அதிபர் ஒபாமா கடிந்துகொண்டதைப் பார்த்த மற்ற செய்தியாளர்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications