நைஜீரிய அதிபர் மகள் திருமணம்... 80 புத்தம் புதிய கார்களை மொய் எழுதிய கட்சிக்காரர்கள்!
நைஜர்: நைஜீரிய அதிபரின் மகள் திருமணத்திற்கு எண்பது புதிய கார்கள் நினைவுப் பரிசாக வந்துள்ளதாக அந்நாட்டுப் பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த 5ம் தேதி நைஜீரியா அதிபர் ஜோனாதனின் மகள் பெயித் எலிசபெத் சேக்வி தந்துவின் திருமணம் நடைபெற்றது. எலிசபெத் தனது பள்ளி நண்பரான காட்வெல் ஒசிம் எட்வர்டை காதலித்து மணந்தார்.
இவர்களது திருமணம் அதிபர் வீட்டில் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய பலர் வாழ்த்துக்களோடு விலையுயர்ந்த பரிசுகளையும் மொய்யாக கொடுத்துச் சென்றுள்ளனர்.

புத்தம் புதிய கார்களில் அணிவகுப்பு...
அதிபர் இல்லத் திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் அவரது கட்சிக் காரர்கள் தானாம். அதிலும், குறிப்பாக எண்பது கட்சிக்காரர்கள் புத்தம் புதிய கார்களில் திருமணத்திற்கு வந்துள்ளனர்.

என்ன பரிசு....
கார்களில் பந்தாவாக வந்திறங்கிய அவர்கள் வெறும் கையை வீசிக் கொண்டு பரிசு எதுவும் கொண்டுவரவில்லை. பின்னர் மணமக்களை வாழ்த்தச் சென்ற போது தான் அவர்களது பரிசு என்னவென்பது திருமணத்திற்கு வந்திருந்த மற்றவர்களுக்கு புரிந்தது.

சாவியைப் பிடிங்க...
மணமக்களை வாழ்த்திய கையோடு தாங்கள் பயணம் செய்து வந்த கார் சாவிகளை மணமக்கள் கைகளில் பரிசாக தந்துள்ளனர் அவர்கள்.

அதிர்ச்சியடைந்த மணப்பெண்....
வரிசையாக இவ்வாறு எண்பது கார்ச் சாவிகள் கைகளில் தரப்பட்டதில் மணப்பெண் எலிசபெத் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications