உங்க அப்பா ஏன் அமெரிக்காவுக்கு ஓடி வந்தார்?.. முஸ்லீம்களை விமர்சிக்கும் கிரஸுக்கு ஒபாமா கேள்வி
பியூனஸ் அயர்ஸ்: அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லீம்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று கூறி வரும் அமெரிக்க குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் உள்ள டெட் கிரஸுக்கு, அதிபர் பராக் ஒபாமா நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.
டெட் கிரஸின் பூர்வீகம் கியூபா. அதை வைத்தே கிரஸுக்குப் பதில் கொடுத்துள்ளார் ஒபாமா. உங்களது தந்தை ஏன் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார் என்பதை ஒருமுறை நினைத்துப் பாருங்கள். அதன் பிறகு இப்படிப் பேச மாட்டீர்கள் என்று அவர் டெட் கிரஸுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
கிரஸின் கோரிக்கை அமெரிக்க கலாச்சாரத்திற்கு முரணானது. அது ஆக்கப்பூர்வமான சிந்தனையும் அல்ல என்றும் ஒபாமா கூறியுள்ளார். கியூபா பயணத்தை முடித்து விட்டு அர்ஜென்டினா வந்த அவர் அங்கு அர்ஜென்டினா அதிபர் மாரிசியோ மார்கியுடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சுதந்திர நாடு...
அப்போது அவர் கூறுகையில், "நான் இப்போதுதான் ஒரு நாட்டிலிருந்து (கியூபா) கிளம்பி வந்துள்ளேன். அந்த நாட்டிலும் இப்படித்தான் குடிமக்களைக் கண்காணிக்கும் நிலை உள்ளது. அதனால்தான் கிரஸின் தந்தை கூட அமெரிக்காவுக்குத் தப்பி வந்தார். அமெரிக்கா ஒரு சுதந்திர நாடு என்பதால் அவர் அங்கு வந்தார். அதை கிரஸ் மறந்து விடக் கூடாது.

அமெரிக்கக் குணமல்ல...
முஸ்லீம்களை இன ரீதியாக, மத ரீதியாக குறி வைத்துத் தனிமைப்படுத்தக் கோருவது அமெரிக்கக் குணமல்ல. அது அமெரிக்க கலாச்சாரமும் அல்லை. ஆக்கப்பூர்வமான சிந்தனையும் அல்ல. இது நமது பலத்தை பலவீனமாக்கி விடும். தீவிரவாதத்தை ஒடுக்க நாம் முயற்சித்து வருவதை சீர்குலைத்து விடும்.

தேசபக்தி...
அமெரிக்காவின் மிகப் பெரிய பலமே அதன் தேசபக்தி கொண்ட மக்கள்தான். முஸ்லீம் அமெரிக்க சமுதாயம், நமது நாட்டின் மிகப் பெரிய பலம். கிரஸ் போன்றோரின் பேச்சால் அவர்கள் தனிமையாக உணர வேண்டிய அவசியமே இல்லை.

தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும்...
ஐஎஸ் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டியது நம் அனைவரின் முன்பும் உள்ள மிகப் பெரிய பணி. அதை விட வேறு முக்கியப் பணி இப்போது நம்மிடம் இல்லை. நாம் ஒற்றுமையாக இருந்து அதைச் சாதிக்க வேண்டும்" என்றார் அவர்.

கோரிக்கை...
முன்னதாக பிரஸ்ஸல்ஸ் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தபோது கிரஸ் இதுபோல பேசியிருந்தார். மேலும் அதிபர் ஒபாமா தனது லத்தீன் அமெரிக்க பயணத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்ப வேண்டும் என்று குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியில் உள்ள 3 முக்கிய வேட்பாளர்களும் கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்து.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications