ஒரு ஆண் எத்தனை பெண்களையும் திருமணம் செய்ய அனுமதி- கென்யாவில் புதிய சட்டம்
நைரோபி: ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் சட்டத்திற்கு கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அங்கீகாரம்
கென்யாவில் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்கள் பலதார உறவு முறை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க முடிவு செய்த அரசு ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்ய அனுமதியளிக்கும் வகையிலான சட்ட மசோதாவை கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு
இந்த மசோதா மீதான விவாதத்தில் ஆண் உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், பெண் எம்.பிக்கள் எதிராகவும் பேசினர். எதிர்ப்பையும் மீறி சட்டத்தை நிறைவேற்ற முயன்றதால் பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

பாதிரியார்கள் கோரிக்கை
இச்சட்டத்துக்கு அதிபர் அங்கீகாரம் அளிக்க கூடாது என்று மகளிர் அமைப்பினரும், கிறிஸ்தவ பாதிரியார்களும் கோரிக்கைவிடுத்துவந்தனர். குடும்பம் என்ற அமைப்பை சீர்குலைக்கும், முதலில் மணந்து கொண்ட மனைவி தெருவில் நிறுத்தப்படுவார் என்பது போன்ற கருத்துக்களை முன்வைத்து பெண்கள் அமைப்பினரும், கிறிஸ்தவ மதரீதியான கோட்பாடுக்கு எதிரானது என்று பாதிரியார்களும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிபர் கையெழுத்து
ஆனால் எதிர்ப்பை மீறி கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டுள்ளார். இச்சட்டப்படி முதல் மனைவியின் ஒப்புதல் கூட இல்லாமல் கணவனால் வேறு பெண்களை மணமுடிக்க இயலும்.
இச்சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தேசிய பெண் வழக்கறிஞர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications