9 நாள் சுற்றுப்பயணமாக நவம்பரில் இந்தியா வருகிறார் இளவரசர் சார்லஸ் - கமீலாவுடன்!
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவியுடன் வரும் நவம்பர் மாதம் 9 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வரத் திட்டமிட்டுள்ளார்.
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இங்கிலாந்து ராணி எலிசபத்தின் சார்பில் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான சார்லஸ் பங்கேற்க உள்ளார்.
அதற்கு முன்னர் தனது மனைவி கமீலாவுடன் இந்தியா வரத் திட்டமிட்டுள்ளார் இளவரசர் சார்லஸ்.

சுற்றுப்பயணம்....
நவம்பர் 6 முதல் 14ம் தேதி வரை சார்லஸ்-கமீலா தம்பதிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

இந்திய நகரங்கள்....
இந்த 9 நாள் சுற்றுப்பயணத்தின் போது தம்பதியர் டேராடூன், புதுடெல்லி, மும்பை, புனே, கொச்சி ஆகிய நகரங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு....
சுற்றுப்பயணத்தின் இடையே, இந்தியாவின் பிரபல தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களையும் சார்லஸ் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

8வது முறை...
இந்த சுற்றுப்பயணத்தையும் சேர்த்தால், சார்லஸ் இந்தியாவிற்கு வருவது இது 8வது முறை. ஏற்கனவே, கடந்த 2006 மற்றும் 2010ம் ஆண்டுகளில் மனைவி கமீலாவுடன் இந்தியா வந்துள்ளார்.

நினைவு நாள்...
தனது சுற்றுப்பயணத்தின் போது 1918ம் ஆண்டு முடிவுக்கு வந்த முதல் உலகப்போரின் நினைவு ஞாயிற்றுக்கிழமையையும் இங்கேயே அனுசரிக்க சார்லஸ் முடிவு செய்துள்ளார்.

இந்தியாவிலிருந்து....
சுற்றுப்பயணத்தின் முடிவில் இங்கிருந்த படியே இலங்லை காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள புறப்படுகிறார் சார்லஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications