அண்டார்டிகா பயணத்திற்காக ‘உறை பனி அறையில்’ பயிற்சி பெற்ற இளவரசர் ஹரி
லண்டன்: விஷேசமாக வடிவமைகப்பட்ட உறைபனி அறையில் 20 மணி நேரம் தங்கி இருந்தார் இளவரசர் ஹரி. இது நவம்பர் மாதம் அவர் மேற்கொள்ள இருக்கின்ற அண்டார்டிகா பயணத்திற்கான முன்னேற்பாடு நிகழ்ச்சி ஆகும்.
இங்கிலாந்து இளவரசரான சார்லசின் 2வது மகன் 29 வயது ஹரி. இவர் வரும் நவம்பர் மாதம் பூமியின் தென்கோடியான அண்டார்டிகாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இது ஒரு நன்கொடை திரட்டும் முயற்சி ஆகும். எனவே, உறைபனி கண்டமான அண்டார்டிகாவில் தங்குவதற்கு முன்னோட்டமாக செயற்கையாக அமைக்கப் பட்ட அறைகளில் தங்கி ஹரி பயிற்சி எடுத்துக் கொள்கிறார்.

3 குழுக்கள்....
அண்டார்டிகாவுக்கு ஹரி தலைமையில் ஒரு குழுவும், சுவீடன் நாட்டு நடிகர் அலெக்ஸ்டாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் தலைமையிலான அமெரிக்கக் குழுவும், ஆங்கில நடிகர் டொமினிக் வெஸ்ட் தலைமையிலான காமென்வெல்த் குழுவும் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

208மைல் பயணாதூரம்....
இப்பயணமானது பனி படர்ந்த அண்டார்டிகா கண்டத்தில் 208 மைல் கடினமான பயண தூரத்தை உள்ளடக்கியது ஆகும்.

மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிர்....
அண்டார்டிகாவில் மிகவும் குளிர் காலமான நவம்பரில் வெப்பநிலை மைனஸ் 35 டிகிரி செல்சியசாக இருப்பதோடு, மணிக்கு 45 மைல் வேகத்தில் குளிர்காற்றும் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.

குளிரைத் தாங்கும் திறன்....
ஆதலால், பயணத்தின் போது கடும் குளிரையும், பனிக்காற்றையும் தாங்கும் வகையில் இளவரசர் ஹரி பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்று தான் இந்த உறை பனி அறை.

விஷேச உறைபனி அறை....
இதற்கென பிரத்யேகமாக இங்கிலாந்தில் உள்ள நுனேட்டம் எனும் இடத்தில் விஷேச அறை அமைக்கப்பட்டு, அந்த அறையில் ஹரி தங்க வைக்கப் பட்டார்.

பிரத்யேக உடை....
அந்த உறைபனி அறையில் தங்கிய போது, அண்டார்டிகா பயணத்தின் போது அணிய வேண்டிய பிரத்யேக உடையை அணிந்து கொண்டாராம் ஹரி.

உறைபனி அறையில்...
கிட்டத்தட்ட 20 மணி நேரங்கள் அந்த அறைக்குள் இருந்திருக்கிறார் ஹரி. அவருடன் அந்த குழுவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 4 பேரும் தக்கி பயிற்சி பெற்றனர்.

15 நாள் பயணம்...
தொண்டு நோக்கத்துடன் 3 குழுவினரால் மேற்கொள்ளப்படும் இந்தப் பயணமானது கிட்டத்தட்ட 15 நாட்கள் நீடிக்கும் என சொல்லப் படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications